districts

பெண்கள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுத்திடுக

சேலம், ஜூன் 29- பெண்கள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மேற்கு மாநகர அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க  மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சேலம் மாநகர மேற்கு குழுவின், 7ஆவது மாநாடு பிள்ளையார் நகர் பகுதி யில் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாநாட்டினை மைதிலி  தலைமையேற்று நடத்தினார். கௌசல்யா அஞ்சலி தீர்மா னத்தை முன்மொழிந்தார். மாநகர செயலாளர் ஜெயமாலா வேலை அறிக்கை முன்மொழிந்தார். இதில் பெண்கள், பெண்  குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். ரேசன் கடைகளில்  மாதந்தோறும் 30 நாட்களும் அனைத்து ரேசன் கார்டுகளுக் கும் அனைத்துப் பொருட்களும் கிடைத்திட வழிவகை செய் திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர் வில், தலைவராக வி.லட்சுமி, செயலாளராக ஆர்ஜெயமாலா, பொருளாளராக ஜி.மைதிலி உள்ளிட்ட 11 பேர் கொண்ட  கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட உதவி செய லாளர் எஸ்.எம்.தேவி பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;