districts

புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

உதகை, ஆக.11- உதகை - கூடலூர் தேசிய நெடுஞ் சாலை அருகே வளர்ப்பு எருமையை  புலி ஒன்று வேட்டையாடிய காட்சிகள் வெளியான நிலையில், மனித - வன விலங்கு மோதல்கள் ஏற்படும் முன் புலி கூண்டு வைத்து பிடிக்க வேண்டு மென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள எச்பிஎப், தலைக்குந்தா, ரோஸ் மவுண்டன் ஆகியபகுதியில் அண்மை  காலமாக புலியின் நடமாட்டம் அதிக ரித்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி, வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் மேய்ச் சலில் ஈடுபடும் கால்நடைகளை வேட் டையாடி தாக்கிக் கொள்ளும் சம்ப வங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து மாதத்தில் 18க்கும் மேற்பட்ட கால்நடைகளை புலி தாக்கிக் கொன் றுள்ளது. இந்நிலையில், வியாழ னன்று இரவு உதகையிலிருந்து கூட லூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள தலைக் குந்தா பகுதியில் சாலையோரம் மேய்ச் சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு எரு மையை வேட்டையாடி, அருகில் உள்ள முட்புதருக்குள் இழுத்துச் சென்றது. அப்போது இரவு நேரம் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் புலி உறுமலின் சத்தத்தை கேட்டு  சாலை ஓரம் உள்ள வனப்பகுதியில் பார்த்தபோது, எருமையை புலி வேட் டையாடி கொன்றதை கண்டு, அச் சத்துடன் வீடியோ பதிவு செய்துள்ள னர். இதனால் மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்படும் முன் தலைக் குந்தா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தொடர்ந்து வளர்ப்பு கால்நடைகளை வேட்டை யாடி வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக் கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உதகை வனத்துறையினர் புலி நட மாட்டத்தை கண்காணிக்கும் பணி யில் ஈடுபட்டும், வளர்ப்பு கால்நடை களை வனப்பகுதியின் அருகே மேய்ச் சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும், பொதுமக்கள் தனியாக செல்ல வேண் டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.