districts

img

பொது காப்பீட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக. 8 – எல்ஐசிக்கு இனையான ஊதிய  திருத்தம் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற் றும் சங்கங்களின் கூட்டு குழு சார்பில்  கவன ஈர்ப்பு இயக்கம் வெள்ளி யன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 1, 2022 முதல் நிலுவை யில் உள்ள ஊதிய திருத்தம், குடும்ப  ஓய்வூதியத்தை 15% லிருந்து 30%  ஆக உயர்த்துவது, மற்றும் தேசிய  ஓய்வூதிய திட்டத்தில் (NPS) நிறு வனத்தின் பங்களிப்பை 14% ஆக  உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கை கள் பொதுக்காப்பீட்டு நிறுவனங்க ளின் கூட்டமைப்பினரால் தொடர்ந்து  வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, இக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு  முழுவதும் பொதுக்காப்பீட்டு துறை யினர் ஒரு மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில், யுனைடெட் இந் தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன் சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற் றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதன்ஒருபகுதியாக கோவை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகத் தில், 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்  மற்றும் அதிகாரிகள் இந்த ஒரு மணி  நேர வேலைநிறுத்தத்தில் பங்கேற்று,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.