districts

img

சாதி ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஆக.8 - அவிநாசி அருகே திருமுருகன் பூண்டியில் அனைத்திந் திய இளைஞர் பெருமன்றத்தினர் வியாழனன்று சாதிய ஆணவப் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த னர். மென்பொறியாளர் கவின் நெல்லையில் ஆணவப் படு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், சாதி ஆணவப் படு கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றக் கோரி அம்மாபா ளையம் பேருந்து நிறுத்தம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருமுருகன்பூண்டி பெருமன்ற நகர நிர்வாகி சுரேஷ்  தலைமையில், கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர்  காளீஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வா கக்குழு உறுப்பினர் முத்துசாமி உட்பட பலர் பேசினர்.