districts

img

சேலம் மாநகரக் காவல் ஆணையராக பிரவீன்குமார் அபிநபு பொறுப்பேற்பு

சேலம், ஜூலை 12- சேலம் மாநகரக் காவல் ஆணை யராக பிரவீன்குமார் அபிநபு வெள்ளி யன்று பொறுப்பேற்றுக் கொண் டார். சேலம் மாநகரக் காவல் ஆணைய ராக செயல்பட்டு வந்த விஜயகுமாரி, சென்னை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பூர் மாநகரக் காவல்  ஆணையராக இருந்த பிரவீன் குமார் அபிநபு, சேலம் மாந கரக் காவல் ஆணையராக மாற்றப்பட்டார். இந்நிலையில், வெள்ளியன்று பொறுப்பேற்றுக் கொண்ட அவர், செய்தியா ளர்களிடம் பேசுகையில், மாநகரில் சட்டம் - ஒழுங்கை பாது காக்க சீறிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள்  மற்றும் குழந்தைகளுக்கு உண்டான குற்றச்சம்பவங்களை  தடுக்கவும், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கவும், சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும். சேலம்  மாநகரில் ரவுடிகள் பட்டியல் எடுக்கப்பட்டு, குற்ற சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந் துள்ளதாக அறியபட்டுள்ளது. காவல் துறையின் முக்கிய  அங்கமாக உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பழுதுகளை  நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.