districts

img

பட்டியலின மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு

தருமபுரி, செப்.4- நீண்ட காலம் வீடு கட்டி குடியிருந்து வரும் பட்டியலின மக்களுக்கு மனைபட்டா வழங்கக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட் டது. தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம், கோழிமேக்க னூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர் கள் குடியிருக்கும் பகுதிக்கு வரி  செலுத்தியுள்ளனர். கழிவுநீர் கால் வாய், குடிநீர் வசதி உள்ளிட்டவை ஊராட்சியின் மூலம் செய்து கொடுக்கப்பட்டது. அரசின் உதவி கள், நலத்திட்டங்கள், மக்களுக் கான அரசு அடையாளங்கள் அனைத்தும் பெற்று தரப்பட்டுள் ளன. கடந்த 22 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த கதிர்வேல் மகன் பழனிசாமி என்பவர், சர்வே எண்:148/8 இல்  சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தை  50 குடும்பங்களுக்கு தலா ஒரு சென்ட் முதல் 3 சென்ட் வரை விக்கி ரய ஒப்பந்த பத்திரம் எழுதி கொடுத்து நிலத்திற்கான பணம் பெற்றுள்ளார். முறையாக பத்தி ரப்பதிவு கிரையம் செய்ய மக்கள் அழைத்தபோது, பழனிசாமி கிரை யம் செய்ய மறுத்துள்ளார். இதனி டையே, வீட்டுமனையின் நிலம் எவ்வகை சார்ந்தது என்று பார்த்த போது, வீடுகட்டி குடியிருந்து வரும் நிலமானது அரசு புறம்போக்கு என தெரிய வருகிறது. எனவே, வீடு கட்டி 22 ஆண்டு காலமாக குடியி ருந்து வரும் அப்பகுதி மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழ னன்று விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். இந் நிகழ்வில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, நிர்வாகி கள் இ.கே.முருகன், என்.பி.முரு கன், சொக்கலிங்கம், ராஜா, எம்.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.