திருப்பூர், ஆக.8 - பல்லடம் பகுதியில் 12 நாட்களுக்கு ஒரு முறை மட் டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறி பொதுமக்கள் பல்லடம் நக ராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். முறையாக குடிநீர் விநி யோகம் செய்யக் கோரி பல் லடம் நகராட்சி அலுவல கத்தை வியாழனன்று பொதுமக்கள் முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது நகராட்சித் தலைவர், ஆணையர் ஆகி யோர் கவனத்திற்கு கொண்டு சென்று சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக் கப்படும் என நகராட்சி பணி மேற்பார்வையா ளர் உறுதியளித்தார். இதையடுத்து, பொது மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், பல்லடம் நகராட்சி, பச்சாபாளையம் பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யபடவில்லை. 12 நாட்களுக்கு ஒரு முறை தான் அத்திக்கடவு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அப்படி வந் தாலும் குறைந்த அளவே கிடைக்கிறது. இத னால், கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகி றோம். எனவே சீராக குடிநீர் விநியோகிக்க கோரி அலுவலர்களிடம் கோரிக்கை வைத் தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே தான் பல்லடம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதாக தெரி வித்தனர்.