ஈரோடு, செப். 4- ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத் துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் வியாழ னன்று ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு லவக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுட னான ஆய்வுக்கூட்டம் வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் சு.முத்து சாமி தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக் கும் வகையில் சத்திரோடு கனிரா வுத்தர் குளத்தில் புதிதாக அமைய வுள்ள பேருந்து நிலையம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சோலார் பகுதியில் பேருந்து நிலையம் கட் டப்பட்டு தற்போது இறுதிகட்ட பணி கள் நடைபெற்று வருகிறது. அதே பகுதியில் கட்டப்பட்டு வரும் காய் கறி மார்கெட் தற்போதைய நிலை ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அத்திக்கடவு - அவினாசி திட்டம் குறித்தும், பெருந்துறை சிப்காட் டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்தும், வீட்டுவசதி வாரிய திட்டப்பணிகள் குறித்தும் என 50-க்கும் மேற்பட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது என்றார். இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தி யூர்.ப.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாச லம் (அந்தியூர்), ஈரோடு மாநக ராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார், மாநகராட்சி ஆணை யாளர் அர்பித் ஜெயின், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.