நாமக்கல், அக. 8 – வழக்கறிஞர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத் தையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக் கணிப்பு போராட்டத்தில் வெள்ளி யன்று ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞ ராக உள்ளவர் கணேசன். இவரிடம், நாமக்கல் தளிகை தட்டராபாளை யத்தை சேர்ந்த சங்கீதா என்பவர், கண வருடான கருத்து வேறுபாடு காரண மாக விவாகரத்து பெறுவது சம்மந்த மாக வழக்கறிஞர் கனேசனை நாடி உள்ளார். இதனையறிந்த சங்கீதாவின் கண வர் முருகானந்தம், சங்கீதாவின் வீட் டிற்கு வந்து, கதவை உடைத்து அத்து மீறி சங்கீதாவிடம் தகராறு செய்த தாக கூறப்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பு, விவாகரத்து வழக்கில் ஆஜராக கூடாது என வழக்கறிஞர் கணேசன் அலுவலகத்திற்கு சென்று, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விட்டுள் ளார். இதுகுறித்து, நல்லிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. இந்நிலையில், சங்கீதாவின் கண வர் முருகானந்தம், மீண்டும் வழக்கறி ஞரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வழக்கில் ஆஜராக கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள் ளார். இதுகுறித்து நாமக்கல் ஒருங் கிணைந்த குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதன்தொடர்ச்சியாக, இந்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என இரண்டாயிரத் திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.