உதகை, செப்.20- நீலகிரி மாவட்டத்தில் உள்ள 63 பழங்குடியின மக்க ளுக்கு 51.10 ஏக்கர் நில ஆவ ணங்கள் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வன உரிமை ஆவ ணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உதகையிலுள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், தமிழ்நாடு வனத்துறை முதன்மை வன பாது காவலர் ராகேஷ் குமார் டோக்கரா, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, முது மலை வன பாதுகாவலர் ஹரிஹரசுதன் ஆகி யோர் முன்னிலை வைத்தனர். இக்கூட்டத் தில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, 63 பயனாளிகளுக்கு 51.10 ஏக்கர் பரப் பளவிலான நிலப்பட்டா வழங்கினார். இதன் பின் அவர் பேசுகையில், நீண்ட காலமாக வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி யின மக்களுக்கு இந்த நில ஆவணங்கள் வழங்கப்பட்டது. மேலும், தேன் மெழுகு, காபி அரவை இயந்திரம், மசாலா தயாரிப்பு போன்ற தொழில்களுக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியின மக்கள் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ப தில் தமிழக முதல்வர் அதிக கவனம் செலுத்தி வருகிறார், என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் கௌதம், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யாதர், கூட லூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதகை நகர்மன்ற துணைத்தலைவர் ரவிக் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.