தருமபுரி, செப்.20- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும் என அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் தரும புரி மாவட்ட 5 ஆவது மாநாடு, அதிய மான் அரசு மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் சனியன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். துணைத்தலை வர் ஏ.சேகர் வரவேற்றார். அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. தெய்வானை துவக்கவுரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் எம். பெருமாள், பொருளாளர் கே.கேச வன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் சங்க மாவட்டச் செயலாளர் டி. பாஸ்கரன், மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தர மூர்த்தி, அஞ்சல் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சுப்பி ரமணி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இம்மாநாட்டில், தமிழக அரசு 2021 தேர்தல் வாக்குறுதிப்படி, 70 வயது பூர்த்தி செய்த ஓய்வூதியர்க ளுக்கு 10 சதம் ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு, அங் கன்வாடி, வனத்துறை ஓய்வூதியர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும். தற்போது பெற்று வரும் அடிப்படை உரிமை யான ஓய்வூதியத்திற்கு ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள ஓய்வூதிய மறு மதிப்பீடு (பென்சன் வேலிடேசன்) சட்ட திருத்தத்தால் எதிர்காலத்தில் ஓய்வூதியம் கிடைக்குமா? என்ற பேராபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக எஸ்.பழனி சாமி, செயலாளராக எம்.பெருமாள், பொருளாளராக கே.கேசவன், துணைத்தலைவர்களாக பி.மோகன் ராஜ், எம்.கார்த்திகேயன், ஏ.சேகர், கே.புகழேந்தி, இணைச்செயலாளர் களாக எம். கோபால், கே.சின்னராஜ், இ.கிருஷ்ணமூரத்தி, எஸ்.குணசேக ரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். மாநிலச் செயலாளர் எம்.நாதன் நிறைவுரையாற்றினார்.