கோவை, ஆக.8- ஊர்ப்புற நூலகங்களை, கிளை நூலகங்களாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, கோவையில் தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப் பினர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர். ஊர்ப்புற நூலகங்களை, கிளை நூலகங்களாக தரம் உயர்த்த வேண்டும். ஊர்ப்புற நூலகர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஊர்புற நூலகர்கள் வெள்ளியன்று கோவை டாடாபாத் பகுதியில் அடையாள உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.