ஈரோடு, ஏப். 8- மோடி எத்தனை முறை வந்தா லும், இங்கு வீடே எடுத்து தங்கினா லும் தமிழகத்தில் ஒரு போதும் நீங் கள் வெற்றி பெற முடியாது. இதனை நான் சவால் விட்டே சொல்கிறேன் என, ஈரோடு நாடாளுமன்ற தொகு தியில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் பிரகாஷை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக உரையாற்றினார். ஈரோட்டில் கிறிஸ்துஜோதி பள்ளி அருகில் பொதுமக்களி டையே வாக்குச் சேகரித்து அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகை யில், நீங்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு. நான் மோடிக்கு சவால் விடுகிறேன். நீங்கள் தமிழ்நாட்டிலேயே வீடு எடுத்து தங்கி இருந்தாலும் நீங்கள் இங்கு ஜெயிக்க முடியாது. ஏனென்றால் சுயமரியாதை மிக்க மக்களை கொண்டது இந்த தமிழ் நாடு. இதை பெரியாரின் மண் மீது நின்று உங்களுக்கு சவாலா கவே கூறுகிறேன். தமிழக முதல்வர் ஈரோட்டிற் கும் இதுவரை கூறிய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற் றிக் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து, ஒன்றிய அரசின் திட்டங் கள் நமக்கு முழுமையாக கிடைத் திடவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நம் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்திட உதயசூரி யன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றியைத் தாருங்கள். ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட் டவுடன் நமது முதலமைச்சர் இந்த தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாறு எரிவாயுவின் விலை ரூ.500க் கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். அதே போல, தமிழ் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிடவும் உறுதி யான நடவடிக்கை மேற்கொள்ளப் படும். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி யில் இருந்த ஒன்றிய அரசு நமக்கு உருப்படியான ஒன்றைக் கூட செய்யவில்லை. உதாரணம் மதுரை எய்ம்ஸ். அதேபோல கொரோனா வந்த போதும் அனை வரையும் முடக்கியதுடன் எல்லோரையும் விளக்கு பிடிக்க வும், ஒலி எழுப்பவும் தான் மோடி கூறினாரே தவிர, மருத்துவ விழிப் புணர்வு ஏற்படுத்தவில்லை. மாறாக நமது முதலமைச்சர். நாட்டிலேயே யாரும் செய்யத்துணி யாத காரியமாக கொரோனா வார் டில் ஆய்வு செய்து தான் முதலில் ஊசி போட்டுக்கொண்டு மக்களி டையே மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கடந்த தலைமுறையில் பெண்கள் பள்ளிக்கு சென்று படிப்பதிலேயே பெரிய தடை இருந் தது. தற்போது தமிழ்நாட்டில் பெண் கல்வி 54 சதவீதமாக ஆக உள் ளது. ஆனால், இந்தியாவில் 24 சத வீதம் மட்டுமே உள்ளது. இது தான் பெரியாரின் சுயமரியாதை, பகுத்த றிவு, பெண் கல்விக்கும், மற்றவர் களின் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம். இது போன்ற மேலும் பல திட்டங்கள் தொடர்ந்திட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து நமது வேட்பாளர் பிரகாஷை பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். இப்பரப்புரையில் வேட்பாளர் கே.இ.பிரகாஷ், அமைச்சர் சு.முத் துசாமி, மாநகரச் செயலாளர் சுப்ரம ணியம், முன்னாள் எம்.பி.கந்த சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து மற்றும் மூத்த தோழர் கே.துரைராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பெருந்திரளா னோர் பங்கேற்றனர்.