நாமக்கல், செப்.24- நாமக்கல் அருகில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங் கத்தின் சார்பில் குதிரை வண்டி பந்தயம் ஞாயிறன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நாட்டு இன குதிரைகளை பாது காக்க விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில், கற்பக விநாயகர் ரேக்ளா பந்தய குழுவினர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நகர் பேருந்து நிறுத்தத்தில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி துவக்கி வைத்தார். இதில் உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 44 இன்ச் குதிரை, பெரிய குதிரை என 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் குதிரைகள் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் இருந்து, புளியம் பட்டி பகுதி வரை சுமார் 8 கிலோமீட்டர் தூர எல்லையை தொடும் வகையில் சீறி பாய்ந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சுழற்கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட குதிரைகள் சீறி பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.