districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பசுந்தேயிலைக்கு உரிய விலை வேண்டும்

உதகை,டிச.14- நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை கேட்டு கவன ஈர்ப்பு பேரணி நடத்த படுகர் நலச்சங்க கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நாக்குபெட்டா படுகர் நலச்சங்க கூட்டம் உதகையில் உள்ள இளம் படுகர் நலச்சங்க கட்டிடத்தில் நடந்தது.  கூட்டத்துக்கு உப தலைவர் காந்தன் தலைமை வகித்தார். பொரங்காடு சீமை தலைவர் தியாகராஜன், நாக்குபெட்டா  நலச்சங்க செயலாளர் மணிவண்ணன், மேற்குநாடு செய லாளர் ராமன், தொதநாடு தலைவர் பெள்ளி, பொருளாளர் போஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளம் படுகர் சங்கத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், பசுந்தே யிலைக்கு விலையை உயர்த்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள வழக்கை பலப்படுத்தி உரிய தீர்ப்பை பெற  நடவடிக்கை எடுப்பது, பசுந்தேயிலைக்கு உரிய விலை  கிடைக்க ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள், அமைச்சர்களை  சந்தித்து நடவடிக்கை எடுப்பது எனவும், இண்ட்கோ தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள்  ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய முதல்வரை சந்தித்து  வலியுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஹெத்தை யம்மன் பண்டிகை முடிந்த பின்னர் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணி நடத்த  முடிவு செய்யப்பட்டது.

கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

கல்லூரி மாணவர் மீது தாக்குதல் கோவை, டிச.14-  கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி அங்குள்ள தனி யார் பொறியியல் கல்லூரியில் மாணவர் ஒருவர் இறுதி  ஆண்டு படித்து வருகிறார். இம்மாணவர் ஓரின சேர்க்கை யாளர் செயலி ஒன்றில் அடிக்கடி தகவல்களை பகிர்ந்து வந்த தாக தெரிகிறது. இந்த செயலியில் அறிமுகமான வாலிபர் ஒரு வர் ஓரின சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என அழைப்பு  விடுத்ததாகவும், இதனையடுத்து மாணவர், செவ்வாயன்று மாலை சரவணம்பட்டி பூந்தோட்டம் நகர் பகுதிக்கு சென்றுள் ளார்.  இதனையடுத்து, அங்கு வந்த வாலிபர் ஒருவருடன்,  அம்மாணவர் நின்று பேசிக் கொண்டதாக சொல்லப்ப டுகிறது. அப்போது, திடீரென அங்கு வந்த 3 பேர், மாண வரை தாக்கி, நிர்வாணப்படுத்தி டார்சர் செய்துள்ளனர். மேலும், அம்மாணவரிடமிருந்து செல்போன் மற்றும் வங்கி  கணக்கில் இருந்த ரூ.11 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள் ளனர். தாக்குதலில் உடல் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர், இதுகுறித்து சரவணம்பட்டி காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழிப்புணர்வு பேரணி

கோபி, டிச.14- தமிழ்நாடு மாநில ஊரக  வாழ்வாதார இயக்கம் சார் பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வன் கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, உதவி திட்ட அலுவலர் சுதா  முன்னிலையில், திட்ட அலு வலர் சார்ஜ் ஆண்டனி மைக் கல் தலைமையில் நடை பெற்றது. இப்பேரணி, வட் டார வளர்ச்சி அலுவலகத் தில் தொடங்கி கச்சேரிமேடு, தினசரி சந்தை, பேருந்து  நிலையத்தில் நிறைவடைந் தது. இதில் திரளானோர் பங் கேற்று கைகளில் பதாகை களை ஏந்தியவாறு, குழந்தை களுக்கும் பெண்களுக்கும்  எதிராக நடைபெறும் பாலி யல் வன்கொடுமைகளை தடுப்போம், பாலியல் சமத்து வத்தை பரப்புவோம், பெண்  உரிமையை பாதுகாப்போம், வன்முறைகளுக்கு எதிராக திரள்வோம், குழந்தை திரு மணத்தை ஒழிப்போம் என முழக்கமிட்டு ஊர்வலமாக சென்றனர்.

சட்டவிரோத மதுபானக்கூடம்: இருவர் கைது

கோவை, டிச.14- கோவை மாவட்டம், அன்னூர் அருகே ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் சட்டவிரோதமாக மதுபானக் கூடத்தை இயக்கி  வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலி  மதுபானங்கள் தயாரிக்கபட்டு வருவதாக மாவட்ட காவல்து றைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப் படை போலீசார் மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதனையடுத்து, காரமடை அருகே தொட்டிப் பாளையம், கண்ணார் பாளையம் ஆகிய 2 இடங்களில் நடத் திய சோதனையில், போலி மதுபானம் தயாரித்த இரண்டு  குடோன்கள் கண்டறியப்பட்டு எரிசாரயம் கைப்பற்றப்பட் டது. மேலும், போலி மதுபானம் தயாரித்த இருவரை போலீ சார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில் அன்னூர் பகுதிகளில் உள்ள ரெஸ்டா ரண்ட்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவது அம்பலமானது.  இதையடுத்து, அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ரெஸ் டாரண்ட்டை சோதனை செய்த போலீசார், அங்கிருந்த சந்தோஷ் மற்றும் புஷ்பவேல் ஆகிய இருவரை கைது செய் ய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 737 மது பாட்டில்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர். இதில், சந்தோஷ் என்பவர், கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவல் சிறப்பு  உதவி ஆய்வாளரின் மகன் என்பது முதற்கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 பேர் மீதும்  வழக்கு பதிவு செய்யபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தெருநாய்களுக்கு ஒளிரும் பட்டை

கோவை,டிச.14- கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் தெரு நாய்களுக்கு ஒளிரும் பட்டைகளை அணிவித்து வரு கின்றனர். கோவை மாநகரில் தெரு நாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாய்கள் குறித்த கணக் கெடுப்புப் பணி சமீபத்தில் நடைபெற்று முடிந்தது, நாய் கள் கருத்தடை மையமும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனாலும், தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்து வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் அங்கும் இங்கு மாக ஓடித் திரியும் தெரு நாய்கள் மீது மோதும் வாகன ஓட்டி கள் காயமடைந்து வருகின்றனர். இதனிடையே சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ரவிச்சந் திரன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து தெரு நாய்க ளின் கழுத்தில் ஒளிரும் பட்டைகளை ஒட்டி வருகின்றனர். இதன் மூலமாக இரவு  நேரங்களில் சாலைகளில் உலா  வரும் நாய்களை சுலபமாக அடையாளம் காண முடியும் என் றும், இதன் மூலமாக தெரு நாய்களால் ஏற்படும் விபத்துக் களை குறைக்க முடியும் என்றும் தன்னார்வலர்கள் தெரி விக்கின்றனர்.

புற்றுநோய் விழிப்புணர்வு வாக்காதான் 

கோவை, டிச.14- புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் வாக்காதான் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகளவில் புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப் பட்டு வருகின்றனர். குறிப்பாக பல்வேறு விதமாக ஏற்படும்  புற்றுநோய் மக்களிடையே தகுந்த விழிப்புணர்வு இல்லாமல்  இருந்து வருகிறது. இதனிடைய இந்த புற்றுநோய் குறித்து  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  கோவை விஜி மருத்துவமனை சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதி யில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதனை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் கொடி  அசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து செவிலியர் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புற்று நோய்க்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதா கைகள் ஏந்தியபடி, சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஊர்வல மாக சென்றனர்.

பள்ளி மைதானத்தில் நடை  பயிற்சி செய்ய அனுமதிக்க கோரிக்கை

திருப்பூர், டிச.14- அவிநாசி அரசு பள்ளி மைதானத்தில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரி மாவட்ட  ஆட்சியரிடம் முன்னாள் மாணவர்கள் மற்றும் உடற்பயிற்சி, நடை பயிற்சி மேற்கொள்வோர் சார்பாக வியாழனன்று மனு  அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழைய பேருந்து நிலையம்  அருகில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அவிநாசி நகர மக்கள்  நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி ஆகியவற்றை மேற் கொண்டு வந்தனர். ஆனால் கடந்த ஒரு வருட காலமாக அங்கு  நடை பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர் தடை விதித்திருப்பதாகவும், அவி நாசி நகர் பகுதியில் உள்ள முதியவர்கள் நடை பயிற்சி  மேற்கொள்வதற்கும், இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி  மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்கும் உள்ள ஒரே இடத்தையும் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. எனவே மீண்டும் பள்ளி மைதானத்தை பயன் படுத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவிநாசி பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாண வர்கள் மற்றும் உடற்பயிற்சி நடைபயிற்சி மேற்கொள்வோர் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

155 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

திருப்பூர், டிச.14- திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ்,  குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த  ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த வாலிபர் கைது, 155 கிலோ  ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட் டது. திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ்,  குட்கா, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண் டறிந்து திருப்பூர் மாநகர காவல் துறையினர் கடும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் ஆணை யர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில், காவல்துறையி னர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் உதவி ஆணையர் அணில் குமார் தலைமையிலான காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள  பகுதிகளை ஆய்வு மேற்கொண்டதில், அங்கு ஒரு வீட்டில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான  ஹான்ஸ் புகையிலை குட்கா போன்ற பொருட்கள் இருப்ப தைக் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து ஹான்ஸ் குட்கா  புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஜோதா ராம் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 155  கிலோ எடை கொண்ட ஹான்ஸ் குட்கா புகையிலை போதை  பொருட்களை பறிமுதல் செய்தனர்.

1120 கிலோ ரேசன் அரிசி கடத்தல்

திருப்பூர்,டிச.14-   திருப்பூர் பூண்டி ரிங் ரோடு, பொங்குபாளையம் வழியாக  ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல்  குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் ஆய்வாளர் மேனகா, துணை ஆய்வாளர் கார்த்தி, உள்ளிட்ட போலீசார்  பொங்குபாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட னர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இரு  சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அர சால்  இலவசமாக வழங்கக்கூடிய ரேசன் அரிசி இருந்தது தெரி யவந்தது. இதனை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி  வந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்  திருப்பூர், பொங்குபாளையத்தை சேர்ந்த ராஜசேகர் (22) என்பதும், அவர் திருமுருகன்பூண்டி, தேவராயம்பாளையம், பொங்குபாளையம், பரமசிவம்பாளையம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு  விற்பனை செய்ய எடுத்து சென்றது தெரியவந்தது. இதனை யடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது  செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் கடத்தி சென்ற  1120 கிலோ ரேசன் அரிசி, இரு சக்கர வாகனம் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

நாளை மின் தடை

அவிநாசி, டிச.14 15.வேலம்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ் கண்ட பகுதிகளில் சனிக்கிழமை ( டிசம்பர் 16) காலை 9  மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது  என அவிநாசி மின் வாரியத்தினர் அறிவித்துள்ளனர். மின் தடை ஏற்படும் பகுதிகள்} கெüதம் கார்டன், கிரீன் பார்க், ஜெயலட்சுமி நகர், பெரியார் காலனி, இந்திரா நகர்,  நெல்லப்பா நகர் 3 ஆவது தெரு, திருவள்ளுவர் தெரு, கோயில் தெரு ஆகிய பகுதிகள்.

12 ஏ பேருந்தை சரியான நேரத்திற்கு இயக்க  பள்ளி மாணவர்கள் கோரிக்கை

தாராபுரம், டிச.14- தாராபுரத்தில் இருந்து குண்டடம் செல் லும் 12 ஏ பேருந்தை சரியான நேரத்திற்கு  இயக்க வேண்டும் என பள்ளி மாணவர் கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். தாராபுரம் பேருந்து நிலையத்திலி ருந்து மாணவர்களுக்காக இயக்கப்படும் 12 ஏ  அரசு நகர பேருந்து காலை7.45 மணிக்கு புறப் பட்டு புறவழிச்சாலையில் நஞ்சியம்பாளை யம், ஆலாம்பாளையம், வடுகபாளையம், குள்ளம்பாளையம், தாளக்கரை வரை சென்று நொச்சிப்பாளையம், க. குல்லாபாளையம் வழியாக மாணவர்களை  ஏற்றிக்கொண்டு சரியாக 9 மணிக்கு குண்ட டம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜேடர் பாளையம் மாதிரி பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு விட்டு பின்பு, திருப்பூர் சென்று  கோவில் வழி வழியாக திருப்பூர் பேருந்து நிலையம் வரை செல்வது வழக்கம். பிறகு மாலை நேரத்தில் அதே வழித்தடத்தில் மாண வர்களை அந்தந்த ஊர்களில் இறக்கிவிட்டு தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வருவது  வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில்  தற்போது புறவழிச்சாலை வழியாக செல்லா மல் தாராபுரம் நகர் கடைவீதி வழியாக சென்று  பிறகு வரும் வழியில் மாணவர்களை ஏற்றி  செல்வதால் பள்ளிக்கு மாணவர்கள் செல் வது தாமதமாகிறது. இதனால் உரிய நேரத் திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாண வர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது தேர்வு நேரம் என்பதால் தேர்வுக்கு உரிய  நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. எனவே பள்ளி மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு 12 ஏ பேருந்தை  வழக்கமான நேரத்திற்கு இயக்கும் வகை யில் போக்குவரத்து கழக நிர்வாகம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண வர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை வழியாக வந்தே பாரத் ரயில்கள்!

கோவை, டிச.14- கேரளம் கோட்டயத்தில் இருந்து சென்னைக்கு கோவை வழியாக புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ள தாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, சபரிமலை சீசனை முன்னிட்டு கேரளம் மாநி லம், கோட்டயத்தில் இருந்து சென்னைக்கு கோவை வழியாக  சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இரண்டு ரயில்களில் ஒன்று 15, 17, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி மற்றும் ஞாயிறு) இயக்கப்பட உள்ளது. சென்னை  சென்ட்ரலில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த  ரயிலானது காட்பாடி, சேலம், ஈரோடு, போத்தனூர்,  பாலக் காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக மாலை 7.20 மணிக்கு கோட்டயத்தை சென்றடைகிறது. இதேபோல், மற்றொரு ரயில் கோட்டயத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த இரண்டு வந்தே பாரத் ரயில்களிலும் 8 பெட்டிகள் இணைக் கப்பட்டிருக்கும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது.

குழந்தைகளை கொன்ற தந்தைக்கு சிறை

சேலம், டிச.14- மேட்டூரில் குழந்தைகள் இருவரை கொலை செய்த வழக்கில், தந்தைக்கு இரட்டை ஆயுள் மற்றும் ரூ.6 ஆயி ரம் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகு தியைச் சேர்ந்தவர் கோபி (40). இவர் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு தூங்கிக் கொண்டிருந்த நிர்மல் (7), நிரஞ்சன் (7) ஆகிய இரண்டு குழந்தைகளையும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார். இதுதொடர்பான வழக்கு, மேட்டூர் ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி தீபா, கோபிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.6000 அபராதம் விதித்து உத்தர விட்டார்.

வரத்து அதிகரிப்பு: தக்காளி விலை சரிவு

ஈரோடு, டிச.14- ஈரோடு தினசரி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து இரு மடங்காக உயர்ந்ததால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, தரும புரி, ஓசூர், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. தக்காளி விளைச்சல் அதி கரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக ஈரோடு தினசரி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து தொடர்ச்சியாக அதிகரித் தது. இந்நிலையில், மார்க்கெட்டிற்கான தக்காளி வரத்து  இருமடங்காக உயர்ந்தது. வழக்கமாக 3 ஆயிரம் பெட்டிகள் வரத்து இருந்து வந்த நிலையில், 6 ஆயிரம் பெட்டிகளாக உயர்ந்தது. இதனால் விலையும் வீழ்ச்சியடைந்தது. அதன் படி, பெரிய பெட்டி தக்காளி ரூ.600க்கு விற்ற நிலையில், புதனன்று ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், சிறிய பெட்டிகள் ரூ.200 முதல் ரூ.150 வரையிலும் விற்பனையானது. ஒரு கிலோ  ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

108 அடி உயர தேசியக்கொடி

உதகை, டிச.14-  நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்தில் 108  அடி உயர தேசியக்கொடி ஏற்பட்டது நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் அருகே ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு அக்னி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்.ஆர்.சி ஹவா ஹில் எனப்படும் மலை உச்சியில் உள்ள ராணுவ வளாகத்தில் 108 அடி உயரமுள்ள தேசியக்கொடியை புதனன்று ஏற்றப்பட் டது. வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில்  இந்தியாவின் கொடி அறக்கட்டளையின் உதவியுடன் நடந்த இந்த விழாவில் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெப்டி னென்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் கொடியேற்றி வைத்து  உரையாற்றினார். இவ்விழாவில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய கமாண்டன்ட் சுனில் குமார் யாதவ், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா, நீலகிரி மாவட்ட காவல் துறை கண்கா ணிப்பாளர் ப.சுந்தரவடிவேலு, மற்றும் முன்னாள் கமாண் டன்ட், ராணுவ உயரதிகாரிகள், ராணுவ வீரர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறும் போது, ‘மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் பாரம்பரிய மற்றும் ஒழுக்கத்தின் கோட்டையாக இந்த பகுதி விளங்கி வருகிறது. இதில் அக்னி  வீரர்களுக்கு முக்கிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின் றன. வெலிங்டன், அருவங்காடு மற்றும் குன்னூர் பள்ளத் தாக்கு முழுவதையும் கண்டு களிக்கும் வகையில்  மலை உச்சி யில் இந்த கொடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நமது தேசிய அடையாளத்தையும் மற்றும் தேசிய உணர்வையும் நினைவூட்டுகிறது’ என்றார்.

ரூ.4 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

சேலம், டிச.14- சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தை அடுத்த கருங் கரடு பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் பொது  ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, புதனன்று நடைபெற்ற ஏலத்தில், முதல் தர கொப்பரைகள் குவிண்டால் ரூ.8,110 முதல் ரூ. 8,489 வரை விற்பனை யானது. இதேபோல இரண்டாம் ரக தேங்காய் கொப்பரை  குவிண்டால் ரூ.3,040 முதல் ரூ. 8,090 வரை விற்பனையா னது. மொத்தம் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான கொப்பரை தேங்காய் விற்பனையானது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

தருமபுரி, டிச.14- சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டு கள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள  கிராமத்தைச் சேர்ந்தவர் மாயகண்ணன் (31). இவர் வீட்டின் அருகே உள்ள சிறுமிக்கு கடந்த 21.3.2017 ஆம் தேதியன்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாயகண்ணனை கைது செய்த னர். இதுதொடர்பான வழக்கு தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், மாயகண்ணன் குற்றம் செய்தது உறுதியானதையடுத்து நீதிபதி சையத் பர்க்கத்துல்லா, மாய கண்ணனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.