districts

img

ஆடு புலி ஆட்டம் கட்டத்தில் சிலம்பம் சுற்றி அசத்தல்

கோவை, ஏப்.14- கோவை அருகே தனி யார் கல்லூரியில் சுமார் 16 ஆயிரம் சதுர அடியில் வரை யப்பட்ட ஆடுபுலி ஆட்டம் கட்டத்தில் நின்று மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றிய நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த அரசூர் பகு தியில் நேதாஜி சிலம்பம் அகாடமி என்ற சிலம்ப பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகி றது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற் காப்பு கலைகளை பயின்று  வருகின்றனர். இந்த நிலை யில் பள்ளியில் சிலம்பம் பயி லும் சுமார் 350 மாணவர்கள் புதிய சாதனை முயற்சியாக தென்னம்பாளையம் பகுதி யில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் 16,000 சதுர அடி பரப்பளவில் ஆடு புலி  ஆட்ட கட்டங்களை ஓவிய மாக வரைந்து, அதில் நின்று சிலம்பம் சுற்றி அசத்தினர். இது அங்கிருந்த பார்வை யாளர்களை மெதுவாக கவர்ந்தது.  இதுகுறித்து சிலம்ப  பயிற்சியாளர் பால்பாண்டி  கூறுகையில், ஆண்டுதோ றும் ஏப்ரல் 14ஆம் தேதி சித் திரை முதல் நாளை ஒட்டி ஓவியம் மற்றும் சிலம்ப கலையை இணைத்து புது மையான சாதனை முயற்சி களில் ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடு புலி ஆட்டம் கட்டங்களை வரைந்து அதில் மாணவ மாணவியர் நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி மேற்கொண் டனர் என தெரிவித்தார்.