districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இளம் பெண்ணை அடைத்து வைத்து மோசடி

உதகை, டிச.11 டிஜிட்டல் கைது என்று கூறி, கோவை ஐடி நிறுவனத் தில் பணியாற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண்ணை, 8 நாட்கள் தனி அறையில் சிறை வைத்து, ரூ. 15.90  லட்சம் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

 நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த  26 வயது இளம்பெண் ஒருவரை மோசடி செய்துள்ளனர். இப்பெண்ணிற்கு, வெளிநாட்டு செல்போன் எண்ணில் இருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர்கள், சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் உங்கள் மூலம் சென்றுள்ளது இதுகுறித்து உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.  மேலும், ஸ்கைப் வீடியோ கால் அழைப்பில் 24 மணி  நேரமும் இணைப்பில் இருக்க வேண்டும் என்றும், உங்க ளுடைய பெயரை பயன்படுத்தி சட்ட விரோத செயல் நடந் திருப்பதால் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய் கிறோம் என்று கூறியுள்ளனர்.  

இதனால் பயந்து போன அப்பெண் அவர்கள் சொல் வதை எல்லாம் கேட்டுள்ளார். 8 நாட்களும் அந்த இளம்பெண்  வீட்டில் உள்ள தனி அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அந்த சமயங்களில் உணவு, இயற்கை உபாதைகள், தூக்கம் உள்ளிட்டவைகளுக்காக பெரும் அவதிப்பட்டுள்ளார்.  

பின்னர், மீண்டும் அழைத்த அவர்கள் இறுதியாக விசா ரணைக்காக உங்கள் கணக்கில் உள்ள பணத்தை அரசு  கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்றும், அந்தப் பணம் உங்க ளுடைய தான் என்று உறுதியானால் தான் உங்களை காப் பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர். இதை முழுவதும் நம் பிய இளம்பெண் தனது கணக்கில் இருந்து ரூ.15.90 லட்சத்தை  மாற்றியுள்ளார். அதன் பின்னர் வீடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மேலும் மர்ம நபர்களை அந்த இளம்பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இத னால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் இது குறித்து உதகை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார்  அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

நாமக்கல், டிச.11- பல்லாக்காபாளையத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள் ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய  கிராமப்புற பெண் தொழிலாளர்கள் சங்க (சிஐடியு) பேரவைக்  கூட்டம், மஞ்சுபாளையம் பகுதியில், விவசாயத் தொழிலாளர்  சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சின்னதாய் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, துணைச் செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட  பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பல்லக்காபாளை யத்தில் 13 சிற்றூர்கள் உள்ளன. பள்ளி, கல்லூரிகள், பஞ் சாலைகள் இப்பகுதியில் அதிகமாக உள்ளன. இங்கு பெண்க ளுக்காக ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு காவல் துறையின் உதவியை உடனடியாக பெற முடியாத நிலை  உள்ளது. குமாரபாளையம் காவல் நிலையமும் தொலை வில் உள்ளதால், பல்லக்காபாளையம் பகுதியில் மகளிர்  நலன் கருதி மகளிர் காவல் நிலையம் அமைத்துத்தர வேண் டும். தேவூர் செல்லும் சாலையில் ஏரிக்கரை பகுதி சாலை  பழுதடைந்துள்ளது. எனவே, பழுதடைந்த சாலையை சரி  செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதைத்தொடர்ந்து பள்ளிபாளையம் வடக்கு ஒன் றிய கிராமப்புற பெண் தொழிலாளர் சங்க தலைவராக சித்ரா,  செயலாளராக ரேவதி, பொருளாளராக சின்னத்தாயி உள் ளிட்ட 15 பேர் கொண்ட அமைப்புக்குழு தேர்வு செய்யப்பட் டது.