districts

img

நில அளவைப்பணிகள் இழுத்தடிப்பு விவசாயிகள் வேதனை

திருப்பூர், ஜூன் 29 - திருப்பூர் மாவட்டத்தில் நில அளவைப் பணிகள் தாமதம் செய்யப்ப டுவதாக ஆட்சியர் அலுவலகத்தில்  வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர்  கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.  மேலும் நில அளவை மற்றும் பட்டா மாறுதல் பணிகள் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டு விவசாயிகளை அலைக்கழிப்பதாகவும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஆர்.மதுசூதனன் கூறினார். இதற்கு பதில் அளித்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், நில  அளவைத் துறையினர் நிலுவைப் பணி  எதுவும் இல்லை என்று அறிக்கை கொடுக்கின்றனர். ஆனால் விவசாயி கள் நில அளவைப் பணிகள் கிடப் பில் போடுவதாகவும், தாமதம் செய்யப் படுவதாகவும், தேங்கி கிடப்பதாக கூறு கின்றனர். இதுகுறித்து கடந்த ஓராண்டு  காலத்தில் தேங்கியிருக்கும் நில  அளவை பணிகள் குறித்து ஆய்வு நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம் பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கூறி னார்.  நில அளவை செய்து பட்டா மாறுதல்  உட்பிரிவு செய்தல் பணிகளில் அதிகாரி கள் வேண்டுமென்றே தாமதம் செய்வ தால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். நில ஆவணங்கள் பத்திரப் பதிவு செய்ய முடிவதில்லை. வங்கி கடன் உள்ளிட்டவை பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கின்றனர் என தெரி வித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய வர்கள், கால்நடை வளர்ப்பை நம்பி இருக்கும் கிராமப்புற விவசாயிகள், தெரு நாய்களால் கடுமையாக பாதிக் கப்படுவது குறித்து விவசாய சங்க நிர் வாகி பாலதண்டபாணி கூறினார். இவர் இந்த கருத்தை முன் வைத்ததும், கூட் டத்தில் பங்கேற்ற பல்வேறு விவசாயிக ளும் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்பு கள் குறித்து சரமாரியாக குற்றம் சாட்டி னர். இதற்கு கால்நடைத்துறை மூலமாக  தெரு நாய்களைப் பிடித்து இனப்பெ ருக்க தடுப்பு அறுவை சிகிச்சை செய்வ தற்கு சிறப்பு ஏற்பாடு செய்யலாம் என்று  ஆட்சியர் ஆலோசனை கூறினார். ஆனால் இது பலன் அளிக்காது. தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர் வாகம் அதிரடி நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று விவசா யிகள் வலியுறுத்தினர்.  மேலும் பிராய்லர் கோழிக்கழிவுகள்  இறைச்சிக் கழிவுகள் ஆகியவற்றை பல் வேறு இடங்களில் முறைப்படுத்தாமல் வீதிகளில் வீசி செல்வதால் அவற்றைத்  தின்னும் தெருநாய்கள், கிராமப்புறங்க ளில் ஆடு, இளம் கன்று குட்டி, மாடுகள்  ஆகியவற்றை கடித்து சேதப்படுத்தி வருவதாகவும், இதுபோல் தெரு நாய்  கடித்து ஏற்படும் இழப்புகளுக்கு விவசா யிகளுக்கு நஷ்ட ஈடு தருவதில்லை, இது  பெரும் பிரச்சனையாக உருவெடுப்ப தால் இழப்பீடு வழங்க வேண்டும் என் றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.  தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி  ஈஸ்வரன் கூறும்போது, தற்போது மழை  பெய்து வருவதால் அத்திக்கடவு அவி நாசி திட்டத்தில் குலம் குட்டைகளுக்கு நீர் நிரப்ப வேண்டும், கௌசிகா நதிக் கரை பகுதியில் மான்களால் விவசாயிக ளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார். புள் ளம்பாளையம் கரித்தொட்டி ஆலைக்கு  தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்  கூறினார். விவசாயிகளிடம் கொப்பரை கொள் முதல் செய்ய வேண்டும், நோய் தாக்கு தலுக்கு உள்ளாகும் தென்னை பயி ருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயி கள் வலியுறுத்தினர். கோவை மாவட்டம் இருகூர் முதல்  கரூர் வரை விவசாய விளைநிலங்கள்  வழியாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் குழாய் அமைத்துள் ளது. மீண்டும் இப்பகுதியில் விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் களை அமைக்காமல் சாலையோரமாக அமைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார் பில் ஈசன் முருகசாமி கூறினார். இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட் சியர் தா.கிறிஸ்துராஜ், “அரசின்  கொள்கை முடிவுப்படி விளைநிலத்துக் குள் செல்லாமல் சாலையோரம் மட்டும்  புதிய திட்டம் கொண்டு செல்ல தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.  பழைய அமராவதி பாசன வாய்கால் களை சீரமைக்க. பொதுப்பணித்துறை நிதி இல்லை என்பதால், மாவட்ட ஆட்சி யர் தனது நிர்வாக நிதியில் ரூ.30 லட்சம்  கொடுத்து, வாய்க்கால்களை சீரமைக்க  தேவையான நடவடிக்கைகளை உடன டியாக மேற்கொண்டால் மட்டும், பழைய வாய்க்கால்களை நம்பி உள்ள  விவசாயிகளை காப்பாற்ற முடியும், என்று ஈஸ்வரமூர்த்தி கூறினார்.

;