districts

img

பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை மெழுகுவர்த்தி ஏந்தி இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

கோவை, ஆக. 29- மேற்கு வங்க மாநிலம், கொல்கத் தாவில் பயிற்சி மருத்துவ மாணவி வன் கொலைக்கு நீதி கேட்டு இன்சூரன்ஸ் சங்க ஊழியர்கள் நாடு முழுவதும் மெழு குவர்த்தி ஏந்தி வியாழனன்று போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இதன்ஒருபகுதியாக, அகில இந் திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோவைக் கோட்ட மகளிர் துணைக்குழு சார்பில் திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி கோட்ட அலுவலகத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பணியிடங்களில் பெண்க ளுக்கு பாதுகாப்பினை உத்திரவாதப் படுத்திடவும், பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக் கையை முன்வைத்து ஏராளமான இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். உதகை இதேபோன்று, உதகை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மெழுகுவத்தி ஏந்தி, இச்சங்கத்தின் தலைவர் கோபால் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. முடிவில் செயலாளர் ஞானசே கரன் நன்றி கூறினார்  சத்தியமங்கலம் இதேபோன்று, சத்தியமங்கலம் எல்ஐசி கிளை அலுவலகத்தில் முன்பு நடைபெற்றது இதில் முதல் நிலை அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.