அன்னூர், பிப்.22- அன்னூர் பேரூராட்சியினை திமுக தலைமையிலான மதச் பற்ற முற்போக்கு கூட்டணி கைப்பற்றிய நிலையில், அதிமுக பல இடங்களில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சியில் மொத்த முள்ள 15 வார்டுகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, திமுக 1,2,3,6,9,10,15 ஆகிய 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் களாக போட்டியிட்ட 5 ஆவது வார்டில் மணிகண்டன் 445 வாக்குகள் பெற்றும், 8 ஆவது வார்டில் முகமது முசீர் 336 வாக்குகள் பெற்றும் பெரும் வெற்றி பெற்றனர். இதேபோல், காங்கிரஸ் கட்சி 14 ஆவது வார்டில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கிடையே, அன்னூர் பேரூராட்சியில் அதிமுக ஒரு வார்டிலும் கூட வெற்றி பெறவில்லை. மேலும், இக்கட்சி யின் வேட்பாளர்கள் போட்டியிட்ட வார்டுகளில் 3 ஆவது வார் டில் மட்டும் இரண்டாம் இடத்தை பெற்றது. மீதமுள்ள வார்டு களில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது குறிப்பிடத் தக்கது.