தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய தொழிற்சங்க மையத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் எல்.சங்கரலிங்கம், செயலாளர் வி.வினோத், ஸ்டெர்லிங் பயோடெக் மாவட்டத் தலைவர் சரவணன், மின் ஊழியர் சங்க நிர்வாகி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.