districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: பொதுக்கழிப்பிடம் பராமரிப்பு

நாமக்கல், ஜன.13- மக்கள் பயன்படுத்த முடியாத நிலை யில் பொதுக்கழிப்பிடம் உள்ளதாக தீக் கதிர் நாளிதழில் விரிவான செய்தி  வெளியான நிலையில், இதன் எதிரொலி யாக தற்போது பொதுக்கழிப்பிடத்தை பராமரிக்கவும், பழுதடைந்த நீர் இணைப்பு குழாயை சரி செய்யும் பணியில்  ஊழி யர்கள் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் பேருந்து நிலையம் அருகே, நக ராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டடம் பயன்படுத்த முடியாத நிலை யில் இருந்தது. போதிய தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறை பூட்டப்பட்டு, பொதுமக்கள், கடை வியாபாரிகள் உள் ளிட்டோர் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி  வெளியானது. இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள், பழுதடைந்த நிலையில்  உள்ள நீர் இணைப்பு குழாயை சரி செய் யும் பணியில்  ஊழியர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். இதுகுறித்து நகராட்சி குடி நீர் வழங்கல் துறை அதிகாரிகள் கூறு கையில், தற்போது போர்க்கால அடிப் படையில் பராமரிப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறோம். பொங்கல் பண் டிகையையொட்டி, பேருந்து நிலையத் திற்கும், வியாபார தலங்களுக்கும் பொதுமக்கள் அதிக அளவில் வருவார் கள் என்பதால், கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்ப டையில் சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகளின் போது கழிப்பிடத்திற்கு செல் லும் நீர் குழாய் துண்டிக்கப்பட்டுள்ள தால், அதை மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் பணிகள் நிறைவு பெற நாட்கள் பிடிக்கும் நிலை  ஏற்பட்டால், தற்காலிகமாக தண்ணீர் வாகனங்களில் கழிப்பிடத்திற்கு தேவை யான நீர் முறையாக வழங்குவதற்கான பணிகள் துவங்க உள்ளதாக தெரிவித் தனர்.