திருப்பூரில் புதனன்று சிஐடியு அலுவலகத்தில் கட்டுமான மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியர்கள் கூட்டம் சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் டி.குமார் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, கட்டுமான தொழிலாளர்கள் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் எம். கணேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.