districts

தியாக வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் கம்யூனிஸ்டுகள்!

தருமபுரியில் செ.முத்துக்கண்ணன் பேச்சு

தருமபுரி, செப்.20- தியாகத்திற்கும், வரலாற்றுற் கும் சொந்தக்காரர்கள் கம்யூ னிஸ்டுகள் என தருமபுரியில் நடை பெற்ற நிகழ்வில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சி யின் முன்னாள் அகில இந்திய  பொதுச்செயலாளர் தோழர் சீத்தா ராம் யெச்சூரி-யின் முதலாமாண்டு நினைவு தினம் மற்றும் மார்க் சிஸ்ட் சந்தா, தீக்கதிர் கட்டிட நிதி யளிப்பு, மண்டல கருத்தரங்கம் தரு மபுரி பூபதி திருமண மண்டபத்தில் சனியன்று நடைபெற்றது. ‘மோடி அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையமும், நவ பாசிச போக்கு களும்’ என்ற தலைப்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி பேசினார். ‘தமிழக வரலாற் றில் கம்யூனிஸ்ட்கள்’ என்ற தலைப் பில் மாநில செயற்குழு உறுப்பி னர் செ.முத்துக்கண்ணன் பேசுகை யில், இந்திய ஜனநாயக கட்டமைப் புக்காகவும், ஜனநாயகம் பாதுகாக் கப்பட வேண்டும்; இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என போராடியவர் தோழர் யெச்சூரி.  தமிழ்நாட்டில் 1908 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் விடுதலை  போராட்டம் நடந்தது. இப்போராட் டத்தில் வ.உ.சிதம்பரனார், சிங்கார வேலர் போன்றோர் தொழிலாளர் களை திரட்டி பங்கேற்க வைத்தனர். 1917 ஆம் ஆண்டு ரஷ்யா புரட்சி  வெற்றி கண்டது.அதனைத்தொ டர்ந்து ஐரோப்பாவில் பல நாடுக ளில் விடுதலை துளிர்விட்டது. 1922 ஆம் ஆண்டில் இந்தியாவில் கம்யூ னிஸ்ட்கள் பூரண சுதந்திரம் வேண் டும் என பேசினர்.நிலகுவியலுக்கு  எதிராக நிலசீர்திருத்தம் என்று  கம்யூனிஸ்டுகள் வலியுறுத்தினர்.  1925 இல் கான்பூரில் நடைபெற்ற  கட்சி காங்கிரசில் சாதிய ஒடுக்கு முறை பாலின ஒடுக்குமுறைக்கு எதிராக போராட தீர்மானத்தை முன்வைத்தனர். அன்று முதல்  இன்று வரை விடுதலைக்கான போராட்டத்தை நடத்தியவர்கள் கம்யூனிஸ்ட்கள். 1925 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ்  உருவானது. இந்த இயக்கம் இந் திய விடுதலை என்பது, மதத்தின்  அடிப்படையில் இருக்க வேண்டும் என முன்மொழிந்தனர். மதச்சார் பற்ற இந்தியாவாக இருக்க வேண் டும். சுரண்டலற்ற இந்தியா உரு வாக வேண்டும் என கம்யூனிஸ்டு கள் முன்மொழிந்தனர். 1947 ஆம்  ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற போது, நிலப்பிரபுத்துவத்துக்கு ஆத ரவாகவும், ஏழைகளுக்கு தொழி லாளி வர்க்கத்திற்கு எதிராகவும் நாடு இருந்தது. இந்தியாவில் மொழி வாரியான மாநிலம் பிரிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. அதன்படி, 1956 ஆம் ஆண்டு நவ.1 ஈம் தேதி இந் தியா முழுவதும் மொழிவாரிய மாநி லங்கள் பிரிக்கப்பட்டன. முதல் தேர் தலில் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட 13  கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றனர். தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட்களால், நெய்வேலி சுரங்கம், போக்குவ ரத்து, நூற்பாலைகள் அரசுடைமை யாக்கப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.