திருப்பூர், ஜூன் 25– திருப்பூரில் இருசக்கர வாகன ஓட்டிகள், பயணிகள் பயணம் செய்வதற்கு சவாலானதாக கல்லூரி சாலை படு மோசமாக, குண்டும், குழியுமாக உள்ளது. திருப்பூர் நகருக்குள் நுழையும் முக்கியமான எட்டு சாலைகளில் ஒன்றாக கல்லூரி சாலை உள்ளது. மலைப் பாதைகளில் சாகசப் பயணம் செய்ய விரும்புவோர் வேறெங்கும் தொலை தூர மலைகளுக்கு செல்ல வேண் டியதில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த சாலை மிக மோசமாக உள்ளது. குறிப்பாக இந்த சாலையில் சிக் கண்ணா அரசு கல்லூரியில் தொடங்கி, மேற்கே அணைப் பாளையம் பாலம் வரையுள்ள சுமார் 1 கிலோமீட்டர் தூரம் மிகவும் மோசமாக உள்ளது. சாலையின் நடுவிலேயே மிகப்பெரும் பள்ளங்கள் அடுத்தடுத்த தொடர்களாக அமைந்துள்ளன. கொங்கண கிரி பிரிவில் வளைவான இடத்தில் தடுப்புகள் இல்லா மல் திறந்த நிலை சாக்கடையும் அதன் அருகிலேயே சாலையில் மிகப்பெரிய குழியும் உள்ளது. குழியில் விழுந்துவிடாமல் சாலையோரம் ஒதுங்கிச் செல்வ தென்றால் சாக்கடைக்குள் விழக்கூடிய ஆபத்து உள்ளது. அதே சமயம் இடது ஓரம் செல்லாமல் வலதுபுறம் சற்று மேலேறிச் சென்றால் எதிரே வரும் வாகனங்களுடன் மோதும் நிலைதான் ஏற்படும். அதிகாலை மற்றும் மாலை இருள் சூழ்ந்த நேரங்க ளில் இந்த பள்ளங்கள் இருப்பது தெரியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. தினமும் ஆயிரக் கணக்கானோர் செல்லக்கூடிய முக்கியமான சாலையாக உள்ளது. குறிப்பாக மாநகர காவல் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அரசு கல்லூரி, பள்ளி கள் உள்ள பகுதியாகவும், ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் குடியிருக்கக்கூடிய பகுதிகளை அணுகக்கூடிய சாலையாகவும் இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக இந்த சாலையை செப்பனிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.