திருப்பூர், அக்.22- திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி, சென்னிமலை சாலை நுழைவு பாலத்தில் சாக்கடை நீர் செல்வதைத் தடுத்திட, உடனடியாக கால்வாய் அமைப்பில் சீரமைப்பு செய்திட வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னிமலை செல்லும் சாலை யின் ரயில்வே நுழைவுப் பாலத்தில் சாக்கடை நீரும், மழைநீரும் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நீண்ட காலமாக இப்பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கி ழமை அதிகாலை சென்னிமலை சாலை ரயில்வே நுழைவுப் பாலத்தில் மழைநீர், சாக்கடை நீர் தேங்கி பயணி கள் செல்ல முடியாத நிலை ஏற்பட் டது. இதையடுத்து, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுக்கா குழு சார்பில் வெள்ளிக்கி ழமை காலை 9 மணிக்கு மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் வாலிபர் சங்கத்தி னர் 20க்கும் மேற்பட்டோரும், பொது மக்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர் களை காவல்துறையினர் கலைக்க முற்பட்டார்கள். சம்பந்தப்பட்ட அதி காரிகள் வராமல் களைய மாட்டோம் என வாலிபர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு பேரூராட்சி தலைவர் பழனி யம்மாள் ராசுக்குட்டி, துணை தலை வர் வி.ஏ.சரவணன் ஆகியோர் போராட்டக் களத்திற்கு வந்து சாக் கடை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த பிரச்சனைக்கு நிரந் தர தீர்வு காண உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்துவதாக உறுதிய ளித்தனர். இதன் அடிப்படையில் மறி யல் போராட்டம் முடிவுக்கு வந் தது. இந்த போராட்டத்தை வாழ்த்தி பொதுமக்கள் சார்பில் வி.என்.மாரப் பன், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளர் கை.குழந்தை சாமி, 7ஆவது வார்டு கவுன்சிலரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கு. சரஸ்வதி ஆகியோர் பேசினர். கோரிக்கையை விளக்கி தாலுக்கா தலைவர் லெனின், தாலுக்கா செய லாளர் பாலமுரளி ஆகியோர் பேசி னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் சௌந்தர்யா, தாலுக்கா பொரு ளாளர் விக்னேஷ், தாலுக்கா துணைச் செயலாளர் சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.