districts

img

அனைத்து அரசு துறைகளிலும் ஒப்பந்த ஊழியர் நியமனம் அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஆக.8 - சமூகநீதியை குழி தோண்டி புதைக்கும் வகையில், அரசுத்துறையில் ஒப்பந்த முறை யில் ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை  கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தி னர் வெள்ளியன்று உடுமலைப்பேட்டையில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப் பாட்டம் நடத்தினர். உடுமலை நெடுஞ்சாலைத்துறை அலுவ லகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் உடுமலை வட்டக்கிளைச் செயலாளர்  வெங்கிடு தலைமையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில், சமூகநீதியை காப்பதாக  சொல்லும் தமிழக அரசு அனைத்து அரசு அலு வலகங்களிலும் ஒப்பந்த பணியாளர் நியமன  முறையை கைவிட வேண்டும். மேலும் மக்க ளின் உயிர் காக்கும் மருத்துவத்துறையில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து, செவிலி யர் முதல் ஆய்வக நுட்பனர் வரை அனைத்து  வேலைகளுக்கும் ஒப்பந்தம் மற்றும் தொகுப் பூதிய நியமன முறையை திணிக்கும் அர சானை 300 ஐ ரத்து செய்ய வேண்டும். சத்து ணவு, சமையலர் வேலைகளுக்கு அரசாணை  எண் 9 மற்றும் 3 ன் மூலம் தொகுப்பூதி யத்தில் புதிய நியமனம் செய்யக்கூடாது. மேலும் தொழிற்பயிற்சி துறை, அமைச்சு பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் வேலைக்கு எடுக்க கூடாது. சிறப்பு காலமுறை  என்ற பெயரில் ஊழியர்களின் உழைப்பை சுரண்டாமல், காலமுறை ஊதிய நியமன முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தபட்டன. மேலும், பொதுப்பணித்துறை அலுவ லகம், அரசு ஐடிஐ, அரசு கலைக்கல்லூரி, வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார  போக்குவரத்து அலுவலகம், நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வனத் துறை, வேளாண் துறை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிறை வாக உடுமலை வட்டாட்சியர் அலுவலகத் தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநிலத்துணை தலைவர் அம் சராஜ் மற்றும் சங்கத்தின் மார்க்கண்டன், தங்க பாண்டி, பஞ்சாச்சரம் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். அவிநாசி: அவிநாசியில் அரசு ஊழியர் சங்கத் தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து  நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அமைப் பின் வட்டக்கிளைச் செயலாளர் கருப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், கோரிக்கைகளை விளக்கி  சுகாதார  செவிலியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அன்னம், அமைப்பின் மாவட்ட இணைச் செய லாளர் ராமன், உள்ளிட்டோர் பேசினர். மேலும்  வட்ட கிளை இணைச் செயலாளர் வெங்கட் டான் நன்றி கூறி நிறைவு செய்தார்.