திருப்பூர், ஆக. 2 - மூன்று மாதங்களாக கலவரம் நீடித்து வரும் நிலையிலும் மணிப்பூ ரில் மத்திய, மாநில பாஜக அரசுகள் அமைதியை மீட்க நடவடிக்கை எடுக் காமல் மௌனம் காப்பது ஏன்? என்ற கேள்வியுடன், அங்கு சட்டத்தின் ஆட் சியை நிலை நிறுத்த வலியுறுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட வழக்கறி ஞர்கள் புதனன்று மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டவும், ஆட்சியாளர்களின் செயலற்ற தன்மையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியபடி பேரணி யாக மாவட்ட ஆட்சியரகத்தின் நுழை வாயில் பகுதிக்கு வந்தனர். அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் பார் அசோசியேசன் செய லாளர் எஸ்.பத்மநாபன் தலைமை வகித்தார். இதில் வழக்கறிஞர் அப் துல் சையது, பெண் வழக்கறிஞர் முத் துலட்சுமி, மூத்த வழக்கறிஞர் ரமணி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.மோகன் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், இன, மத கலவரங்களின்போது பெண்களை கருவிகளாக பயன்படுத்தி அவர் கள் மீது வன்முறைகள் ஏவி விடப்படு வதையும், மூன்று மாதங்களாகியும் கலவரத்தை அடக்கி, அமைதியை நிலைநாட்டத் தவறியதையும் கண் டித்தனர். மணிப்பூரில் இப்போது நடைபெறும் சம்பவம் நாளை இந் தியா முழுமைக்கும் நடக்காது என்று சொல்ல முடியாது. எனவே வெறுப்பு அரசியலைக் கைவிட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண் டும். மத்திய, மாநில அரசுகள் சட்டத் தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் மூத்த வழக்கறிஞர்கள் விவேகானந்தன், பார்த்திபன், ராஜேந்திரன், எஸ்.பொன்ராம் மற் றும் பெண் வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட் டத்தின் முடிவில் வழக்கறிஞர் கோபி நாத் நன்றி கூறினார்.