districts

img

அக்னிபாத்: என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

விசுவாசம் இருக்குமா? - அ.சவுந்தராசன்

90 கால கட்டத்தில் ஒப் பந்த முறையில் தொழிலா ளர்கள் என்பதை தொழிற் சாலை முதலாளிகள் மிக  அதிகமாக பின்பற்ற தொடங் கினர். இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசத்தின் மீது அக்கறை கொண்ட  தொழிற்சங்க இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின் றனர். தொழிற்சாலைகளில் இந்த ஒப்பந்த முறை என் பது தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலே ஆகும். ஒரு தொழிற்சாலையில் பயிற்சி அல் லது ஒப்பந்தம் முறையில் பணியில் சேரும் தொழிலாளி, ஒப்பந்த காலம் முடிந்தவுடன் வீடு திரும்ப வேண்டும். ஒப்பந்த காலத்தில் அந்த  தொழிற்சாலைக்கு தனது முழு உற்பத்தி திற னையும் வழங்க வேண்டும். இந்த கொடிய முறையை நிறுத்த, ஒழிக்க வேண்டும் என்று  நாம் போராடிக் கொண்டிருக்கின்ற வேலையில் தான் ஒன்றிய பாசிச பாஜக அரசு அக்னிபாத் என்னும் ராணுவத்திற்கான காண்டிராக்ட் திட் டத்தை கொண்டு வந்துள்ளது. அக்னிபாத் திட்டத்தின் மூலம், 17 வயதிலி ருந்து 21 வயது வரை உள்ளவர்கள் ராணுவத் தில் சேரலாம். 6 மாதங்கள் பயிற்சி முடிந்தவு டன் 4 ஆண்டுகள் பணிபுரியலாம். நான்கு  ஆண்டுகள் பணி முடிந்தவுடன் அனைவரும் வீட்டிற்கு திரும்ப வேண்டும். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான வேறு ராணுவத்திற்கு ஆட் கள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்தின் மூலம் பணியில் சேருபவர்களுக்கு ஒரு ராணுவன வீரரின் ஊதியத்தில், பாதியும், வீடு  திரும்பும் போது ஓய்வூதியம் கிடையாது. 4  ஆண்டுகள் பணி என்று மோடி தலைமையி லான ஒன்றிய அரசு கூறுவதற்கு காரணம், 5  ஆண்டுகள் பணியிலிருக்கும் பட்சத்தில் கிரா ஜூட்டி (பணிக்கொடை) அளிக்க வேண்டும். அதை தவிர்ப்பதற்காகவே 4 ஆண்டுகள் பணி என்று திட்டத்தை அறிவித்துள்ளனர். ராணு வத்தில் வேலை என்ற ஆசையுடன் இருக்கும் இளைஞர்கள் தலையில் இந்த திட்டம் மண்ணை அள்ளி போட்டுள்ளது. 

இது என்ன விளைவை ஏற்படுத்தும் என் றால், ஒரு தொழிலாளி வாழ்நாள் முழுவதும் ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் போது, அந்த தொழில் நிறுவனத்திற்கு அதன் முழு விசுவாசத்தை கொடுப்பர். ஆனால், ஒரு குறிப் பிட்ட காலத்திற்கு பிறகு அந்த தொழிலாளி பணியிலிருந்து நீக்கப்படுவது தெரிந்துவிட் டால், அந்த விசுவாசம் காணாமல் போய்விடும். ராணுவம் என்பது “தன் இன்னுயிரையே தரு வேன்” என்று தேசப்பக்தியோடு இணையும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளி யேற வேண்டும் என்றால் என்னவாகும். இளை ஞர்களின் தேசப்பக்தி என்வாகும் என்பதை ஒன்றிய ஆட்சியாளர்கள் யோசித்து பார்க்க வேண்டும். வெளியில் வேலை எதுவும் கிடைக் காமல், குறைந்த அளவு படிப்பு தகுதி இருந்தால் போதும் என்கிற நிலையில் இருக்கும் இளை ஞர்கள் தான் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்கிற ஆசையில் வருகின்றனர். ஆனால், அக்னிபாத் திட்டத்தின் மூலம் பணியில் சேர்ந்த இளைஞர்களுக்கு வேறு எங்கும் வேலை கிடைக்காது என்ற நிலை உருவாகும். 2 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்வதற்கான உடல்தகுதி, மருத்துவத்தேர்வை முடித்து எழுத்துத்தேர்வுக்காக காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் 6 லட்சம் பேர். கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டதால் எழுத் துத்தேர்வு நடைபெறாமல் போனதால், அந்த  இளைஞர்கள் வேலைக்காக காத்துக்கொண்டி ருக்கின்றனர். இப்போது அந்த இளைஞர் களின் நிலை என்பது கேள்விக்குறியே?. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் 26 ஆயிரத்திற் கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். வேலைக்காக காத்துக்கொண்டிருப்பவர்கள், நான்கு ஆண்டு களுக்கு பிறகு ராணுவத்திலிருந்து வெளி யேற்றப்படும் இளைஞர்கள் ஆகியோர் தங்க ளது வாழ்க்கை காணாமல் போய்விட்டதாக கருதி இந்தியா முழுவதும் பெரும் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்தி லிருந்து வெளியேறும் இளைஞர்களுக்கு அனைத்து துறைகளிலும் 10 சதவிகித இடஒதுக்கீடு என போராட்டத்தையடுத்து அறிவித்துள்ளனர். இந்த  அறிவிப்பில் இளைஞர்களின் கல்வித்தகுதியின் மூலமே இடஒதுக்கீட்டில் வேலை கிடைக்கும் என்றும் தெரி வித்துள்ளனர். அந்த கல்வித் தகுதி இல்லாத காரணத்தி னால் தான் ராணுவத்தில் இணைவது என்கிற நிலையில் என்ன வேலை கிடைக்கும். 

இப்போராட்டத்தில் ஈடுபட்டால் அக்னி பாத் திட்டத்தில் வேலை இல்லை என்று மறுப் பது தவறான செயலாகும். மொத்தத்தில் அக்னி பாத் திட்டம் இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும் திட்டமாகும். இத்திட்டத்தை திரும்பப்பெற இந்தியா முழு வதும் இளைஞர்கள் பெரும் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வடமாநி லங்களில் ரயில்கள் தீயிட்டு கொளுத்தப்பட் டுள்ளன. மோடியின் தொகுதியான வாரணாசி யிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், இது வரை பிரதமர் நரேந்திர மோடி தன் வாயைக்கூட திறக்கவில்லை. வேளாண் விரோத சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி ஓராண்டாக விவசாயிகள் தலைநகரில் போராட்டம் நடத் தியபோதும், மோடி மௌனம் காத்தார். இது ஒரு போதும் பயன்தராது. எனவே, ராணுவத்திற் கான காண்டிராக்ட் திட்டமான அக்னிபாத் மட்டுமின்றி, தொழிற்சாலைகளிலும் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். அதுதான் இந்தி யாவிற்கு தேவை.

முருகேசன் வழக்கறிஞர்

அக்னிபாத் திட்டம் மூன்று  வகையில் இந்திய மக்களுக்கு எதிராக உள்ளது. இந்திய ராணுவம் நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சுற்றி பாகிஸ்தான், சீனா போன்ற பகை நாடுகள் உள்ளன. இந்த நிலையில், 4 வருடத்திற்கு மட்டும் பணியாற்றும் வகையில் பணியமர்த்துவது பாதுகாப்புக்கு அச்சமாகும். இத்தனை ஆண்டுகாலம் கல்வி மறுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட இளைஞர்களை 17 வயதில் பணிமர்த்துவது என்பது அவர்களை மேற்படிப்புக்கு தகுயற்றவர்காளக மாற்றும் செயல். சங்பரிவார் கும்பல் நாட்டில் மத மோதல்களை தூண்டுபவர்கள். அத்தகைய நபர்களுக்கு ராணுவ பயிற்சி கொடுத்து மத கலவரத்தை ஏற்படுத்த திட்டம் தான் அக்னிபாத். வேலைவாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறும் மிகப்பெரிய மோசடி திட்டமாகும்.

லலிதா, வழக்கறிஞர்

குலக்கல்வி திட்டத்தை மேம்படுத்தி தான் இந்த அக்னி பாத் திட்டத்தை கொண்டு வருகின்றனர். இந்த திட்டம் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இதனை தான் ஆரிய மாடல் செய்யப்பார்க்கிறது. குலக்கல்வியில் என்ன முறை இருந்ததோ அதனை மீண்டும் அமல்படுத்தவே இந்த திட்டம்  வகுக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்கவேண்டும. நிச்சயமாக இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது.

சுதாகர், பத்திரிகையாளர்

ஏற்கனவே பள்ளி கல்லூரிகளில் என்.சி.சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தின்படி இளைஞர்களை பணியமர்த்தினால் அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும், பணி முடிந்து அவர்கள் வெளியே வரும் போது கல்வித்தகுதி இல்லாதவர்களாக இருப்பார்கள். பணிக்காலம் முடிந்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிப்பது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. பணிக்கு சேரும் இளைஞர்களின் கல்வி பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அவர்களை பகுதி நேரபடிப்புக்கு அனுமதிக்க வேண்டும்.

-தொகுப்பு: கே.எஸ்.எம்.

தேவராஜ், திருப்பூர்

100 வீரர்களில் 25 வீரர்களை மட்டும் எடுப்பது ஏமாற்றமாக உள்ளது. நான்கு வருடம் ராணுவத்தில் பணி புரிந்துவிட்டு வெளியே வரும் வீரர்கள் பள்ளிப் படிப்பை மட்டும் வைத்து வேலை தேடுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். மேலும் இந்திய ராணுவத்தில் இணைவதற்காக இத்தனை ஆண்டுகள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களின் நிலை கவலை அளிக்கிறது.  இனி வரும் தேர்தல்களில் இந்திய ராணுவத்தில் குறைந்தபட்சம் நான்கு வருடம் பணியாற்றி தேச பக்தியை நிரூபித்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். அக்னிபத் திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் நான்கு வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிந்து வெளியே வரும் இளைஞர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்து இலவசமாக கல்லூரிப்படிப்பை அளிக்க வேண்டும்.அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும், என்றார்.

-தொகுப்பு: வே.தூயவன்

திருவடி - கோவை

ஒன்றிய அரசு எந்தவித ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் இந்த அக்னிபாத் திட்டத்தை கொண்டுவந்ததாகவே நினைக்கிறேன். இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் கடுமையான பிறகு வயதை அதிகரிக்கிறோம் என்கிறார்கள். இப்போது மேலும் போராட்டம் தீவிரமான பிறகு நான்கு வருடம் கழித்து வந்தால் 10சதவீதம் இடஒதுக்கீடு, இறந்தால் ஒரு கோடி என அடுத்தடுத்து அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியப்படும் என தெரியவில்லை. நான்கு வருடம்தான் வேலை என்றால் நான் உயிரைக்கொடுக்க தயராக இருக்க மாட்டேன். எப்போது காண்ட்ரெக்ட் முடியும் வீட்டுக்குப்போகலாம் என்கிற மனநிலைதான் இளைஞர்களுக்கு இருக்கும். இப்போது பாஜகவின் தேசிய தலைவர் ஒருவர் நான்கு வருடம் கழித்து வருகிற ராணுவ வீரருக்கு பாஜக அலுவலகத்தில் வாட்ச்மென் வேலை தருகிறோம் என்கிறார். எனக்கு இப்போது தெரியவேண்டியது என்னவென்றால் இவர்கள் ராணுவத்திற்கு ஆள் எடுக்கிறார்களா அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆள் எடுக்கப்போகிறார்களா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.  

மதிவானன் - (கோவை) சொந்த தொழில் செய்பவர்

ஐடி போன்ற துறைகளில் எந்த காரணமும் இன்றி வீட்டிற்கு அனுப்புகிறார்கள். 130 கோடிப்பேருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது. நான் எல்லாம் சொந்த தொழில்தான் செய்கிறேன். அரசை நம்பியெல்லாம் இல்லை. ராணுவத்தில் சேர்ந்தால் ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பார்கள் என்பார்கள். தடுமாறும் இளம்வயதில் ராணுவத்தில் சேர்த்துவதால் ஒழுக்கம் வரும். கல்லூரியில் நான்கு வருடம் படிக்கிறோம் என நினைத்துக்கொண்டு ராணுவத்திற்கு சென்று வரவேண்டியதுதான். ஒழுக்கம் வரும் என்கிற நம்பிக்கையோடு இந்த அறிவிப்பை வரவேற்கிறேன்.

-தொகுப்பு: அ.ர.பாபு

சம்பத் ராஜ் - முன்னாள் ராணுவ வீரரின் மகன் 

முன்னாள் ராணுவத்தினருக்கு பென்சன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கின்றன. இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபத் என்பது அடிமை மாதிரி தான் இருக்கிறது. இத்திட்டம் மிஸ் யூஸ் ஆகும். ரெகுலர் சர்வீஸில் இருப்பவர்களே ஓய்வு பெறப் போகிறேன் எனக்கு தேவையில்லை, நான் இதை செய்ய வேண்டியதில்லை என்கின்றனர்.  அக்னிபத்தில் செல்பவர்கள் அடுத்த வருடம் சென்று விடுவேன். அதனால் என்ன விதி இருந்தாலும் செய்ய மறுப்பார்கள். ராணுவம் என்றால் கட்டுப்பாடு, ஒழுங்கு இருக்கும். இனி அது இருக்காது. 4 ஆண்டுகள் முடிந்த பிறகு ரூ.12 லட்சம் வரை கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. ராணுவ வீரர் என்றாலே நாட்டுக்காக பாடுபட்டவர் என்ற ஒரு மரியாதை இருக்கும். இனி அது இருக்காது என்று கூறினார்.

ஜிலானி இளைஞர் (ஈரோடு)

நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணி முடித்தால் ரூ.10 லட்சம் தருவார்கள் என்கின்றனர். ஏற்கனவே ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவோம் என்று கூறியதைப் போல இதையும் நம்ப முடியாது. 4 அண்டுகளில் 10 லட்சம் என்பது இங்கேயே சம்பாதிக்க முடியும். பணம் சம்பாதிப்பதற்காக யாரும் ராணுவத்திற்கு செல்வதில்லை. நாட்டைக் காக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகத் தான் செல்கிறார்கள். 100 பேரில் 75 சதமானவர்களை திருப்பி அனுப்பி விட்டு 25 சதமானவர்களை வைத்துக் கொள்வோம் என்பது பயத்தை உருவாக்குகிறது. வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும். நாட்டின் பொருளாதாரத்தில் 50 சதம் ராணுவத்திற்கே செலவாகிறது. அதை குறைக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் என்று கூறுகின்றனர். அது ஏற்புடையதல்ல. அதற்கு ஊழலை ஒழித்தாலே போதும் என்றார்.

-தொகுப்பு: சக்திவேல்

ஒரு சாமானியனாக கேட்டுக்கொள்கிறேன்...

ரேகசெளந்தர் - மாணவர்

நம் நாட்டில் உள்ள வாக்கு அரசியலில் பல கட்சிகள் பல் வேறு விஷயங்களில் அரசியல் செய்த போதிலும் ராணுவம் மற்றும் சுகாதாரத்தில் நேரடியாக எந்தவொரு கட்சியும் அரசியல் செய்ய வில்லை. ஆனால் தற்போது அக்னிபாத் என்ற திட்டத்தின் மூலம்  அரசு ராணுவத்தில் அரசியல் தளம் அமைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள் நான்கு வருடங்கள் மட்டுமே பணியாற்ற முடியும். இதற்கு காரண மாக அரசு கூறுவது இதன் மூலம் ராணுவத்திற்கு செய்யப்படும் செல வில் மிச்சப்படும். அப்படி பாதுகாப்பில் சமரசம் செய்து மிச்சம்  செய்யப்படும் பணத்தை அரசு என்ன செய்ய திட்டம் வைத்திருக் கிறது. இத்திட்டத்தில் அரசியல் இருப்பதாக கூறியதற்கு காரணம், இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கடுப்படும் சிலர் 4 வருடங்க ளுக்கு பிறகு டீடெயின் செய்யபட வாய்ப்பிருகிறது. அப்படியென் றால் தேர்வு முறை வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். அது சாத்தியமா? ஏன் நீட் என்று வட மாநிலங்களில் எத்தனை இடங்களில் வினாத்தாள்கள் வெளியாயின. அப்படி இருக்குபட் சத்தில் தங்கள் அரசியலை நிலைநிறுத்த ஏதுவாக உள்ளவர்களை டீடெயின் செய்வார்கள். இந்நிய ராணுவ உலக ராணுவங்களில் முதல் 4 இடத்தில் உள்ளது. இதனை சீர்குலைக்கிறார்கள் வருத்த மாக உள்ளது. 

-கீர்த்திகா சிவக்குமார் (மாணவி)

கட்டிடம் கட்ட காண்ட்ராக்ட்-க்கு ஆள் எடுத்து பாத்திருப் போம். ஆனால், நாட்டை காக்க வேண்டிய மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்த ஒரு ராணுவ வீர னையே காண்ட்ராக்ட்டில் வேல பாக்கணும்--னு சொல்ற அதிசயத்தை இப்போ தான் பாக்குறேன். இளைஞர் களின் ராணுவ கனவை நெருப்பிட்டு கொளுத்துவதற்கு இணையான செயல்  என்பதால்தான் இந்த திட்டத்திற்கு  “அக்னி”பத் திட்டம் என பெயர் வைர் தார்களோ என்னவோ. ஒரு வேலை நாட்டை காப்பாத்ததான் நிரந்தர பணியில்ராமர் இருக்கார்னு நினைத்திருப்பார்களோ...? 

நவீன் - செய்தி நிறுவனத்தில் வேலை செய்பவர்

அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்தின் ஒட்டுமொத்த கொள்கைகளையும் சீர்குலைக்கும் அபாயகரமான திட்டமாகும். இத்திட்டத்திற்கான தகுதி வயது என 17 வயதை நிர்ணயித்துள்ள தால் மாணவர்களின் உயர்கல்வி நோக்கத்தை சிதைக்கும் வகை யில் திட்டம் உள்ளது. இந்திய ராணுவ வீரர்களின் சலுகை களையும், உரிமைகளையும் வெறும் நான்கு ஆண்டுகளுக் குள்ளாகவே சுறுக்கும் வகையில் இந்த திட்டம் உள்ளதால் இது இந்திய ராணுவ வீரர்களின் தியாகங்களை அவமதிக்கும் ஒரு திட்டமாகும். ஆகவே, ஒன்றிய அரசு இதுபோன்ற கேலிக் கூத்தான திட்டங்களை கைவிட்டுவிட்டு, உயிரை துச்சமென நினைத்து இந்திய நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என ஒரு சாமானியனாக கேட்டுக்கொள்கிறேன்.

தோ.டால்டன்

தோ.டால்டன் 17.5 முதல் 26 வயதுக்குட்பட்டவர்களை குறி வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ராணு வப்பணித் திட்டம் தான் அக்னிபாத் திட்டம். 6 மாத கால பயிற்சியும் மூன்றரை ஆண்டுக்  காலப் பணிக்குப்பின் எவ்வித வாழ்வாதார  பாதுகாப்பும் ஓய்வூதியமும் இல்லாமல் அந்த ராணுவ வீரர்கள்  திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்கள் இதர பணிகளில்  அமர்த்தப்படுவார்கள் என்பது அரசாங்கத்தின் பதிலாக இருக்கி றது. இத்திட்டத்தினால் இந்திய இராணுவத்தின் சராசரி வயது  குறையும் என்றும் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும் ஓய்வூதியம் வழங்கும் செலவு மிச்சமாகும் என்றும் பலக்  காரணங்களை அரசாங்கம் கூறினாலும்¸ ஒரு சராசரி இந்திய குடிமகளுக்கு இது மிகப்பெரிய தீங்காகவும்.  நம் இந்திய நாட்டின் மக்களில் பெரும்பாலனோர் இன்றளவும் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்ந்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பின் காரணமாக நடுத்தர வர்க்கத்து மக்கள் பலரும் கூட வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். ஏழை குடும்பங்கள் பலவற் றுக்கும் ராணுவப்பணி தான் தீர்வாகவும் சமூகத்தில் மதிப்புடன் வாழ வழியாகவும் இருக்கிறது. எப்படியாவது ராணுவத்தில் சேர்ந்து விட்டால் போதும்¸ தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றி விட லாம் என்னும் நோக்கத்தில் தான் பல இளைஞர்கள் ராணு வத்தில் இணைகின்றனர். அவர்களின் ஆசை மற்றும் கனவைத் தகர்ப்பதாகத் தான் அக்னிபாத் திட்டம் திகழ்கிறது. நாட்டில் பணக்காரர்கள் இராணுவத் தில் இணைபவர்கள் சொற்ப அளவே.  அப்படியே இணையும் சிலரும் இராணுவ குடும்பத்தில் வந்தவர்களாகத்தான் இருக்கி றார்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. என்னதான் ‘நாடு¸ நாட்டுப்பற்று” என்று பேசினா லும்¸ இராணுவத்தில் இணையும் பலருக்கும் அது மாத ஊதியம் பெற்றுத்தரும்¸ தன் குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு வேலைவாய்ப்பு தான். அக்னிபாத் திட்டம் அந்த வேலைவாய்ப்பை¸ அவர் களின் நம்பிக்கையை சீர்குலைப்பதாக இருக்கிறது.  இந்த ‘அக்னிபாத்” திட்டத்தை இராணுவத்தில் செயல்படுத்து வதை விட¸ இந்தியா அரசாங்கத்தை நடத்திச் செல்லும் அரசு  பதவிகளில்¸ குறிப்பாக ‘குடியரசுத் தலைவர்¸ பிரதமர்¸ அமைச்சர் கள்” ஆகியவற்றில் செயல்படுத்தினால்¸ ஒன்றிய அரசுக்கும்¸ இந் திய நாட்டிற்கும் நன்மையாக அமைந்திடும், என்றார்.

-தொகுப்பு: ஸ்ருதி