districts

img

தாவரவியல் பூங்காவிற்குள் புகுந்த கரடி

உதகை, செப்.20- உதகை அரசு தாவரவியல் பூங்கா விற்குள் புகுந்த கரடி ஒன்று, உணவு  தேடி புல் மைதானத்தை சேதப்படுத்திய தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து  பகுதிகளிலும் தற்போது வனவிலங்குக ளின் நடமாட்டம் அதிகரித்து வருகி றது. கரடி, யானை, காட்டு மாடுகள் மற் றும் சிறுத்தை போன்ற வனவிலங்கு கள், உணவு தேடி மக்கள் வாழும் பகுதிக் குள் வருவதால் அடிக்கடி மனித – விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.  குறிப்பாக, கரடிகள் உணவு தேடி நாள் தோறும் மக்கள் வாழும் பகுதிக்குள்  வந்து, பூட்டிய கடைகள், கோவில்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்தி, உணவுப்பொருட்களை சூறையாடிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற சமயங்களில், அவைகள் பொதுமக்களை விரட்டும் சம்பவம், தாக்கும் சம்பவம் நாள்தோறும் அரங் கேறி வருகிறது. வனங்களை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே கரடிகள் நடமாட் டம் காணப்பட்ட நிலையில், தற்போது  நகர்ப்புறங்களில் அதிகரித்துள்ளது. உதகை நகரின் பல்வேறு பகுதிகளிலும் நாள்தோறும் இரவு நேரங்களில் உலா வரும் கரடிகளால் மக்கள் அச்சத்திற்கு  உள்ளாகியுள்ளனர். சில சமயங்களில் பகல் நேரங்களிலேயே மக்கள் வாழும் பகுதிக்குள் வந்துவிடுகின்றன. இந்நிலையில், சனியன்று அதி காலை கரடி ஒன்று அரசு தாவரவியல்  பூங்காவில் மேல்பகுதியில் அமைந் துள்ள இத்தாலியன் கார்டன் பகுதியி லுள்ள புல்வெளி மைதானத்தை தோண்டி உணவு தேடியதை நடை பயிற்சி மேற்கொண்டவர்கள் தங்களது  செல்போனில் வீடியோ பதிவு செய்துள் ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே,  பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள்  மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.