பென்னாகரம், மே 22- சின்னம் பள்ளி அருகே மினி டெம்போ கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில், ஒருவர் பலியானார். மேலும், 18 பேர் படுகாய மடைந்தனர். பென்னாகரம் அடுத்த பெரும்பாலை அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் ராமராஜ் என்பவரின் புதுமனை புகு விழாவிற்காக நல்லம்பள்ளி அடுத்த ஜருகு அருகே மேற்கத் தியான் கொட்டாய் பகுதியில் உள்ள அவரது உறவினர்கள் 20 க்கும் மேற்பட்டவர்கள் சனியன்று காலை விழாவிற்கு வந் திருந்தனர். இந்நிலையில், விழாவை முடித்து விட்டு மாலை வீடு திரும்பும் போது சின்னம்பள்ளி செல்லும் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மினி டெம்போ பள்ளத்தில் கவிந்து விபத்துள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 18 க்கும் மேற்பட்டவர்கள் படுகாய மடைந்தனர். இதில் ராமர் என்பவரின் மகன் சகாதேவன் என் பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அருகே இருந்தவர்கள் ஆம்புலன் சிற்கு தகவல் தெரிவித்து, பென்னாகரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம டைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கபட்டு மேல் சிகிச்சைக் காக தருமபுரி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இங்கு காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கபட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரும் பாலை போலீசார் சம்பவ இடத்தில் பலியான சகாதேவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து ஓட்டுனர் சக்தி என்பவரின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 18 க்கும் மேற்பட்டவர்கள் மினி டெம்போவில் பயணம் செய்து கவிழ்ந்து விபத்துள்ளான சம் பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.