districts

img

கழுவந்தோண்டி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

அரியலூர், மார்ச்.25- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி ஊராட்சியில் நீர் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோ ண்டி கிராமத்தில் வடக்குத் தெருவில் புதிதாக போர் போடப்பட்டு அதிலிருந்து மோட்டார் மூலம் நீர் ஏற்றி கழுவந்தோண்டி நடுத்தெரு, வடக்குத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் விநியோகம் செய்து வருகிறது.  இந்நிலையில், சமீபகாலமாக மோட்டாரிலிருந்து நீரேற்றுவதில் கால தாமதம் ஏற்படுவதால் நடுத்தெரு, வடக்குத்தெரு ஆகிய இரண்டு தெருக்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம், ஊராட்சி செயலாளர் அழகேசன் உள்ளி ட்டோர் கிராம மக்களை வேண்டுமென்றே அலட்சியப்படுத்துவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

;