districts

img

அரியலூர் நகராட்சி 17 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் துரைசாமிக்கு சின்னத்துரை எம்எல்ஏ வாக்குச் சேகரிப்பு

அரியலூர், பிப்.13 - அரியலூர் நகராட்சி 17  ஆவது வார்டு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் துரைசாமிக்கு ஆதரவாக கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, எண்ணெய்க் காரதெரு, சடையப்பர் தெரு  ஆகிய வீதிகளில் சுத்தியல்,  அரிவாள், நட்சத்திரம் சின்னத் திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மாவட்டச் செயலாளர் இளங்கோவன், அரியலூர் ஒன்றிய செயலாளர் துரை அருணன், செந்துறை ஒன்றிய செயலாளர் கு.அர்ஜுனன், திருமானூர் ஒன்றிய செயலாளர் ஆர். புனிதன், மாவட்ட குழு  உறுப்பினர் எஸ்.டி.சாமி துரை, எஸ்.மலர்கொடி, எஸ். கார்த்தி, எம்.சந்தானம், ஏ. கிருஷ்ணன் மற்றும் கிளை ஒன்றிய குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.