districts

திருவில்லிபுத்தூர் குடவறை கோவிலில் தீ விபத்து

திருவில்லிபுத்தூர்,பிப்.17- விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூர் அருகே உள்ளது மூவரை வென்றான் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 1600 வருடங்கள் பழமையான குட வறை கோவில் உள்ளது. பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் குடவறைகோவில் இந்தியாவில் உள்ள 7 குடவறை கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவில் அழகு இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்தா லும் இது குடவறை கோவில் என்பதால்  தொல்லியல் துறை வாசம் உள்ளது.  இந்நிலையில் வெள்ளியன்று மாலை குடவறை கோவிலின் அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மலை பற்றி எறிவது போல் காட்சி அளித்தது. மலைக்கொ ழுந்திஸ்வரர் கோவில் அமைந்துள்ள சுற்றுப்புறத்தில் இருக்கும் கிராமத்து மக்கள் சுதாரித்து போராடி தீயை அணைத்தனர்.