districts

img

திருப்பத்தூர், காட்பாடியில் வாலிபர் சங்க பிரச்சாரம் துவக்கம்

வேலூர், ஏப்.24 - இளைஞர்களுக்கு வேலை கேட்டு ஞாயி றன்று (ஏப்.24) வேலூர் மாவட்டத்தில் இரண்டு பயணக்குழுக்கள் பிரச்சாரத்தை தொடங்கின. வேலையை அரசியல மைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையாக்க வேண்டும், ஒன்றிய, மாநில அரசுத்துறைகளில் காலி யாக உள்ள பணியிடங் களை நிரப்ப வேண்டும், மதிப்பூதியம், தொகுப்பூதி யம், கான்ட்ராக் போன்ற முறைகளை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநிலம் தழுவிய சைக்கிள் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. ஏப்.21 அன்று 4 முனை களிலிருந்து தொடங்கிய பிரச்சாரம் 4வது நாளாக ஞாயிறன்றும் பிரச்சாரத்தை செய்தது. இவற்றோடு 7 மையங்களில் இருந்து துணைக் குழுக்கள் பிரச்சாரம் செய்கின்றன.

திருப்பத்தூர்
இதன் ஒருபதியாக திருப்பத்தூரிலிருந்து, திருப்பத்தூர் மாவட்ட செய லாளர் எஸ். பார்த்திபன் தலைமையில் இருச்சக்கர வாகன பிரச்சார பய ணம் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தை வழக்கறி ஞர் நல்லசிவம் கொடி யசைத்து துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டச் செய லாளர் காசி, சிஐடியு அமைப்பாளர் கேசவன், முன்னாள் நகர்மன்ற உறுப்பி னர் ஜாபர் சாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பிரச்சார பயணக் குழு ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்தது.

காட்பாடி
காட்பாடியிலிருந்து மாவட்ட துணைச் செய லாளர் ஆர்.சுடரொளியன் தலைமையிலான குழு வினரின் பிரச்சாரத்தை விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ப.சக்திவேல் துவக்கி வைத்தார். வாலிபர் சங்க முன்னாள் நிர்வாகிகள் செ.ஏகலைவன், கே.ஜெ.சீனி வாசன் மற்றும் மாண வர் சங்க மாநில துணைத்தலைவர் பெ. திலீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக்குழுவினருக்கு காங்கேயநல்லூர் சாலை மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகில் தமுஎகச மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, மின்ஊழியர் மத்திய அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்விருக்குழுக்களின் பிரச்சாரமும் குடியாத்தத்தில் ஒன்றுசேர்ந்தது. இதனை யொட்டி பழைய பேருந்து நிலையத்தில் வாலிபர் சங்க நகர செயலாளர் வாசுதேவன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.