districts

அடகு கடையில் ரூ.70 லட்சம் நகை கொள்ளை

காட்பாடி, மே 24- வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடியை சேர்ந்தவர் பாண்டு திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மகன் அனில்குமார் (24). இவர் சேர்க்காடு கூட்ரோட்டில் சித்தூர் செல்லும் சாலையில் நகை அடகு கடை நடத்தி வரு கிறார். வழக்கம் போல் அனில்குமார் திங்கட்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் செவ்வாய்க் கிழமை காலை கடைக்கு வந்த அனில்குமார் சுவற்றில் துளையிட்டுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் கடையில் வைக்கப் பட்டிருந்த 70 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை கள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து திருவலம் காவல் நிலையத்தில் அனில்குமார் புகார் அளித்தார்