districts

மாட்டு வண்டியில் மணல் எடுத்துச் செல்ல அனுமதி: சிஐடியு கோரிக்கை

வேலூர் மார்ச் 10 - மாட்டு வண்டித் தொழி லாளர் சங்கத்தின் (சிஐடியு) பேரவைக் கூட்டம் வேலூர் மாவட்ட குடியாத்தம் தாலுகா நடுப்பேட்டை அலுவலகத்தில் எஸ்.பங்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி கே.சாமிநாதன் பேரவையை துவக்கி வைத்தார். பி.காத்தவராயன், சி.சரவணன், ஏ.குப்பு, பி.குணசேகரன், எஸ்.சிலம்பரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமசந்திரன் பேரவையை நிறைவு செய்து பேசினார். தலைவராக எஸ்.பங்மூர்த்தி, செயலாளராக டி.விஜயன், பொருளாளராக அசோகன் உள்ளிட்ட 35 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. குடியாத்தம் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.