districts

img

காட்பாடியில் மக்கள் ஒற்றுமை கலை இரவு

வேலூர், ஜன. 1- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் காட்பாடி கிளை சார்பில் புத்தாண்டு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் கே.ஆர்.சுந்தரம் நூற்றாண்டு நினைவு ‘மக்கள் ஒற்றுமை கலை இரவு’ கிளைத் தலைவர் எஸ்.ஸ்ரீராம் தலைமையில் நடை பெற்றது. கிளைச் செயலாளர் சலீம் வர வேற்றார். சாரல் கலைக்குழுவினரின் மக்கள் இசை பாடல்கள், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கடந்த மாதம் தமிழக அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடை யேயான கலைத்திருவிழாவில் மாநில அளவில் தேர்வான செஞ்சி அரசுப்பள்ளி மாண வர்களின் பறை இசை நிகழ்ச்சியும் நடை பெற்றது. காம்ரேட் டாக்கீஸ் குழுவினர் இடதுசாரி சிந்தனைகளையும், சமூக அவலங்களையும் ராப் பாடல்களும், எதிர் கலைக்குழுவினரின் "இன்று தஸ்தகீர் வீடு" நாடகமும் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் சங்கரதாஸ் “சுதந்திர போராட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் பேசினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் பிரகதீஸ்வரன், மாவட்ட தலைவர் சகு வரதன் ஆகியோரும் பேசினர். சமூக பங்களிப்பு, இயற்கை விவசாயம் என பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கிய அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் செ.நா.ஜனார்த்தனன், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கோபால.ராசேந்திரன், இயற்கை விவசாயி செந்தமிழச்செல்வன் ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சுரேந்திரன் நினைவுப்பரிசு வழங்கினார்.