districts

img

ஆராய்ச்சிக்கு ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது

வேலூர், ஏப். 11 - ஆராய்ச்சிக்கு ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது என்று தில்லி உயர்  நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் வேதனை தெரிவித்தார். விஐடியில் பல்கலைக் கழக தினவிழா மற்றும் விளையாட்டு விழா வேந்தர்  ஜி.விசுவநாதன் தலைமை யில் திங்களன்று (ஏப் 10) நடைபெற்றது. அப்போது அவர் பேசு கையில், விருது வாங்கிய வர்களில் மாணவியர்கள் தான் அதிகம். இது பாராட்டப்பட வேண்டியது.  மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டி லும் பங்கெடுக்க வேண்டும். இது உங்கள் வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விஐடி பல் கலைக்கழகத்தில் உள்ள 4 வளாகங்களிலும்  80 ஆயிரம்  மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இங்கு எண்ணிக்கை மட்டும் அல்ல  கல்வியில் தரமும் இருக்கி றது. அதனால் தான் இந்திய அளவிலும், உலகளவிலும் சிறந்து விளங்குகிறோம். உலகளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 200 இடத்தை பிடிக்க  விஐடி முயற்சி மேற்கொண் டுள்ளது. விஐடி பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கடந்த ஆண்டு 970 நிறுவனங்கள் வந்தன. இந்தாண்டு இதுவரை 820 நிறுவனங்கள் மூலம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உயர் கல்வி திட்டத்தில் இதுவரை மாணவ, மாணவிகளுக்கு ரூ.8.50 கோடி உதவி தொகை வழங்கப்பட்டுள் ளது. இதில் 50 விழுக்காடு விஐடி பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது என்றார். தில்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி முருகேசன் பேசு கையில், விஐடி பல்கலைக் கழகம் 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. தற் போது வேலூர் வளாகத் தில் மட்டும் 40 ஆயிரம்  மாணவர்கள் பயில்கின்ற னர். இங்கு படித்த மாண வர்கள் 84 நாடுகளில் பணிபுரிகின்றனர். வி.ஐ.டி பல்கலைக்கழகம் தொடங் கப்பட்ட போது கல்லூரியாக தொடங்கப்பட்டு பல்கலைக் கழகமாக மாறியுள்ளது.

இதற்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனின் கடின  உழைப்பு, அர்ப்பணிப்பு தான் காரணம் என்றார். விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வத்தின் முயற்சியால் வேலூர் வளாகம், சென்னை வளா கம் ஆகியவை பசுமையாக  உள்ளது. இது பாராட்டப்பட வேண்டியது. உயர் கல்வி யில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில் நிதி ஒதுக்கீடு குறை வாக உள்ளது. உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. விஐடி பல்கலைக்கழகம் சிறந்த நிர்வாகம், கல்வி யின் மூலம் சாதனை படைத் துள்ளது. அவர்கள் நல்ல மாணவர்களை மட்டுமல்ல, நல்ல குடிமக்களையும் உரு வாக்கியுள்ளனர். படிக்கும் போது மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும். ஆராய்ச்சி இல்லாமல் உயர்கல்வி சாத்தியம் இல்லை. நாம் எவ்வளவு ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்பது முக்கியம். இப்பொழுது ஆராய்ச்சிக்கு என ஒன்றிய, மாநில அரசு களின் நிதி ஒதுக்கீடு குறை வாக உள்ளது. கல்வி  நிறுவனங்கள் மாணவர் களை ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கப்படுத்த வேண்டும். பொறியியல் மாணவர்க ளால் தான் புதிய கண்டுபிடிப் புகளை கண்டுபிடிக்க முடி யும். நீங்கள் கண்டுபிடிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் உலகத்திற்கு ஒரு வரப்பிர சாதமாக அமையும். மாண வர்கள் தான் ஆராய்ச்சி செய்ய சிறந்தவர்கள். மாணவர்கள் தாங்கள் படித்த கல்வி நிறுவனங்க ளுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார். காக்னிசன்ட் நிறுவ னத்தின் துணைத்தலைவர் மாயா ஸ்ரீகுமார் பேசுகை யில், மாணவ மாணவிக ளுக்கு பல்வேறு இடங்களில்  வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை தற்போது உள்ளது. இந்தியாவில் விஐடி இருப்பது பெருமை என்றார். முன்னதாக கல்வி  மற்றும் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த  விஐடி பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 209  பேருக்கு 9 லட்சம் மதிப்பி லான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது இதில் துணைத்தலை வர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், பதிவா ளர் ஜெயபாரதி, பல்கலைக் கழக துணை வேந்தர் ராம்பாபு கோடாலி, இணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், விளையாட்டு துறை இயக்குநர் தியாக சந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.