districts

img

பாலாற்றில் அடித்துச் சென்ற பைக்: 2 மாதங்களுக்கு பிறகு மீட்பு

வேலூர்,பிப்.6- பாலாற்றில் கடந்த நவம்பர் மாதம் கரை புரண்டு வெள்ளம் ஓடியது. அப்போது பாலத்தை மூழ்கியபடி வெள்ளம் சென்று கொண்டிருந்தது. அதனால் அந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டிருந்தது. அதனை பொருட்படுத்தாத கே.வி.குப்பத்தை அடுத்த வடுகன்தாங்கலை சேர்ந்த ராணுவ வீரர் மனோகரன் (32). இருசக்கர வாகனத்தில் பாலத்தை கடக்க முயன்றார். சிறிதுதூரம் சென்ற நிலையில் வெள்ளத்தின் வேகத்தில் இருசக்கர வாகனத்துடன் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். வேலூர் தீயணைப்பு வீரர்கள், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை யினர் பாலாற்றின் பல்வேறு பகுதிகளில் படகுகள் மூலம் பல நாட்கள் தேடியும் மனோகரனை கண்டுபிடிக்க முடியவில்லை. பாலாற்றின் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் பாய்தோடியதால் மனோகரன் மற்றும் அவரின் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருந்தது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல்  துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த நிலையில் சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் தரைப்பாலத்தில் இருந்து 150 அடி தூரத்தில் பாலாற்று மணலில் புதைந்தபடி மோட்டார் சைக்கிள் ஒன்று கிடந்தது. இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் அங்கு காவல்துறை யினர் அந்த வாகனத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் மனோகரனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.