districts

img

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்திடுக மாதர் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

உளுந்தூர்பேட்டை, ஆக. 1 - கள்ளக்குறிச்சி சக்தி தனி யார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு அரசை வலியுறுத்தி யுள்ளது. சங்கத்தின் 16ஆவது மாவட்ட மாநாடு உளுந்தூர் பேட்டையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் ஏ.சக்தி சங்கக் கொடியை ஏற்றினார் மாவட்டத் தலைவர் ஏ.தேவி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் இ.அலமேலு வேலை அறிக்கையையும், பொரு ளாளர் என்.தனலட்சுமி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலஅ செயலாளர் எஸ்.ராணி, திருநாவலூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் இ.சாந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாநிலச் செயலாளர் வி.பிரமிளா மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக நகரச் செய லாளர் வீ.சந்திரா வரவேற்றார்.மாவட்டக்குழு உறுப்பினர் வி.ரீட்டா நன்றி கூறினார். ஏ.லூயிசாமேரி, முனியம்மாள், எஸ்.விசாலாட்சி, பி.சத்தியா, ஆனந்தி, ஏ.மணிமேகலை, இ.மீனா, பி.மாணிக்கம், யூ.அம்பிகா, அஞ்சலை, சுமையா, ராசாத்தி, கலைச் செல்வி, பரிமளா, புஷ்பா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

முன்னதாக விருத்தாச்சலம் சாலை சந்திப்பில் இருந்து பேரணி நடைபெற்றது. நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலையை அம லாக்க வேண்டும், பெண்கள், குழந்தைகள், மாணவி கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்திட வேண்டும், பணி யிடங்களில் பெண்களுக் கான பாலியல் புகார் கமிட்டி (விசாகா) அமைக்க வேண்டும், அரசு மருத்துவ மனைகளில் உள் கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தி; மருத்துவர்கள், செவிலியர்களை பணிய மர்த்திட வேண்டும், மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து அம லாக்கிட வேண்டும், உளுந்தூர்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி துவக்கிட வேண்டும், குடியிருப்பு பகுதிகளில் குடிநீர், சாலை வசதியை மேம் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்..
17 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழுவிற்கு தலை வராக இ.அலமேலு செய லாளராக ஏ.தேவி பொருளாளராக ஏ.லூயிசா மேரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.