court

img

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - திமுக வெற்றி செல்லும்!

சென்னை,மார்ச்.18- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி செல்லும் என உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், சிவாவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜமாணிக்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளித்துள்ளனர்.