நாக்பூரில் நடந்த வன்முறை காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மன்னர் அவுரங்கசீப் கல்லறையை அகற்றக்கோரி வலதுசாரி குழுக்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.