உடுமலை, மார்ச் 31- உடுமலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தேவனூர் புதூர் கிராமத் தைச் சேர்ந்த கட்டுமான தொழி லாளியின் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர் மிரட்டி பாலியல் வன்செயலில் ஈடுபட்டுள் ளார். இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் உடுமலை அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மனநலம் பாதிக் கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடுமலையில் உள்ள மாவட்ட காவல்துணைக் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தை முற்று கையிட்டு, பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்ட மோகன் என்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து மோகன்குமார் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்தனர்.