districts

img

விவசாயிகளை ஏமாற்றிய சில்வர் மையின் சில்க் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உடுமலை, டிச.9- பட்டு கூடு உற்பத்தி செய்யும் விவசாயிக ளுக்கு தர வேண்டிய பணத்தை தர மறுக்கும்  சில்வர் மையின் சில்க் நிறுவனத்தின் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கத்தினர் சனியன்று உடுமலை பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குநரிடம் மனு அளித்தனர்.

பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, உடுமலைப்பேட்டை அமராவதி செக் போஸ்ட் பகுதியில் சில்வர் மைன் சில்க்  மைன் என்ற தனியார் பட்டு நூற்பாலை  செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகிறார்கள். விவசாயிகளிடம் இருந்து வாங்கும் பட்டு கூடுகளுக்கு கையாளும் கட்டணம் (கேன்டிலிங் சார்ஜ்) என்ற பெயரில் 0.75 சதவீதம் பிடித்தம் செய்து, அரசுக்கு செலுத்துவதாக கூறி, பல ஆண்டுகளாக விவசாயிகளிடம் வசூல்  செய்துள்ளனர்.

மேலும் வசூலித்த பணத்தை  அரசுக்கு செலுத்தாமல்  ஏமாற்றி உள்ளார்கள்.  பட்டுவளர்ச்சி துறை நடைமுறைக்கு முற்றி லும் மாறாக, பல ஆண்டுகளாக விவசாயிக ளிடம் ஏமாற்றி வசூல் செய்த பணத்தை தனி யார் நிறுவனத்திடம் இருந்து பெற்று தர  வேண்டும். மேலும், விவசாயிகள் விற்பனை  செய்த பட்டுக்கூடுகளுக்கு வழங்க வேண்டிய  பணத்தையும் பெற்று தர வேண்டும். நிறுவ னத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கூறப்பட்டுள்ளது. இதில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வ ராஜ், மாநிலச் செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.