districts

img

அன்பென்று கொட்டு முரசே! வாலிபர் சங்க பிரச்சாரப் பயணம் துவக்கம்

திருவாரூர், டிச.27 - “அன்பென்று கொட்டும் முரசே, ஒடுக்குமுறையற்ற ஊர்களும், சமத்துவ முள்ள மனங்களும்” என்ற தலைப்பில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக டிச.27, 28, 29 ஆகிய மூன்று நாள்கள் இரு சக்கர வாகனப் பிரச்சார பயணம் நடை பெறுகிறது.  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம், கொல்லுமாங்குடி கடைவீதி யில் வெள்ளியன்று வாலிபர் சங்கத்தின் இருசக்கர வாகனப் பிரச்சார பய ணத்தை சிபிஎம் மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் ஜெ.முகமது உதுமான் துவக்கி வைத்தார். சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரளத்தில் நகரச் செயலாளர் ஜி.செல்வம் தலைமையில் பிரச்சார  பயணத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட் டது. அதனை தொடர்ந்து பிரச்சார பயணம்  பூந்தோட்டம் வழியாக குடவாசல் (வடக்கு) ஒன்றியம் எரவாஞ்சேரி கடை வீதியில் வந்த போது, சிபிஎம் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.அன்பழகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப் பட்டது.  குடவாசல் (தெற்கு) ஒன்றியம் பிலா வடி வழியாக வந்த பிரச்சார பயண குழுவி னருக்கு குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர்  பா.சுகதேவ்  தலைமையில் வரவேற்பு அளிக்கப் பட்டது. இதில் அமைப்பின் மாநில துணைத் தலைவர் பா.ஆனந்த் மற்றும் மாணவர் சங்கத்தின் குடவாசல் அரசு கல்லூரி கிளை நிர்வாகிகள் உற்சாக வர வேற்பளித்தனர். தொடர்ந்து குடவாசல் சிபிஎம் அலு வலகத்தில் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செயலாளர் டி.லெனின் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பிரச்சாரத்தின் முதல் நாள் பயணம், வலங்கைமான், நீடாமங்கலம் ஒன்றியங் களில் நடைபெற்று கொரடாச்சேரியில் நிறைவடைந்தது. பயணத்தில் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஸ், மாவட்டச் செயலா ளர் ஏ.கே.வேலவன், பொருளாளர் கே. எம்.பாலா மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட 100 வாலிபர்கள் பேரணியில் பங்கேற்று பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கினர். 

பிரச்சாரம் பயணம்

டிச.28 அன்று கொரடாச்சேரியில் திரு வாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் பிரச்சாரத்தை துவக்கி  வைக்கிறார். டிச.29 அன்று திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே. மாரிமுத்து கச்சனத்தில் பிரச்சாரத்தை துவக்கி வைக்கிறார். டிச.29 அன்று திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பிரச்சார பயண நிகழ்ச்சியை நிறைவு செய்து வைக்கிறார். அதனைத் தொ டர்ந்து திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மாநிலச் செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன் சிறப்புரை யாற்றுகிறார். ஒற்றுமையை பறைசாற்றிடுவோம்! திருவாரூர் மாவட்டத்தில் நீட், டெட்,  டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு களை துவங்க வேண்டும். அரசு தலைமை  வட்ட மருத்துவமனைகளில் நவீன உயர்தர மருத்துவ கட்டமைப்பை மேம்ப டுத்தி பற்றாக்குறையாக உள்ள மருத்து வர், செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கோவில்வெண்ணி சுங்கச் சாவடியை முழுமையாக கட்டி முடிக்காமல் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும். திருத்துறைப்பூண்டி முதல் வேளாங்கண்ணி, பேரளம் முதல் வேளாங்கண்ணி வரை நடைபெற்று வரும் ரயில்வே பணியை விரைந்து முடித்து பயணிகள் சேவையை துவங்கிட  வேண்டும். திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து  பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும்.  அனைத்து கிராமங்களிலும் மக்கள் ஒற்றுமையை பறைசாற்றிட சமத்துவ சுடு காடு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பிரச்சார பயணம் நடைபெறுகிறது.