districts

img

மின் ஊழியர் மத்திய அமைப்பு திருவாரூர் கிளை அலுவலகம் திறப்பு

திருவாரூர், டிச.27 - திருவாரூர் மின் மேற்பார்வை  பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பாக வியாழ னன்று மாலை திருவாரூர் மின் திட்ட கிளை தொழிற்சங்கத்தின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.  தோழர் எஸ்.பஞ்சரத்தினம் நினைவு கல்வெட்டு-அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு திட்ட  தலைவர் எஸ்.சகாயராஜ் தலைமை வகித்தார். திட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் வரவேற்றார்.  சிஐடியு  மாவட்டச் செயலாளர் டி.முருகை யன், தஞ்சை மண்டல செயலாளர் எஸ்.ராஜா ராமன் ஆகியோர் தோழர் எஸ்.பஞ்ச ரத்தினம் நினைவு கல்வெட்டை திறந்து வைத்தனர். மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் சங்க அலுவலகத்தை திறந்து வைத்து நிறைவுரையாற்றினார். முன்னதாக அமைப்பின் மூத்த தோழர்களின் நினைவு உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.  திருவாரூர் மின் மேற்பார்வை பொறியா ளர் பி.லதா மகேஸ்வரி, செயற்பொறியாளர் எஸ்.செந்தமிழ்செல்வி, செயற்பொறியாளர் (பொது) டி.காளிதாஸ் மற்றும் சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கே.என்.அனிபா, செய லாளர் டி.முருகையன் உள்ளிட்ட தோழமை சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்துரை ஆற்றி னர்.  திட்ட பொருளாளர் ஜி.ஆர்.முகேஷ் நன்றி கூறினார். திருவாரூர், மன்னார்குடி கோட்ட வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.