districts

img

விவசாயிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலிக்க அறிவுறுத்தல்

பெரம்பலூர், டிச.27- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை  உழவர் நலத்துறை சார்பில் விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலை மையில் வெள்ளியன்று நடைபெற்றது.    கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை  சார்பாக இடுபொருட்கள் வழங்கிய மைக்கும், தனலெட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய  விவசாயிகளுக்கு பணம் ரூ.6.88/- கோடி பெற்றுத் தந்ததற்கும் அனைத்து  விவசாயிகளும் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் பேசு கையில், “பட்டா கேட்டு விண்ணப்பித் தவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். என்.செல்லதுரை பேசுகையில், “ஆலத்தூர் பகுதியல் கல்குவாரி களால் விவசாயம் பாதிப்படைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சின்னமுட்லு அணை மறுசீராய்வு  செய்ய உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். பால் உற்பத்தியாளர் களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” என்றார். அனைவரின் கோரிக்கைகளை யும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், கோரிக்கைகளுக்கு தொடர்புடைய அலுவலர்களை உடனுக்குடன் விளக்க மளிக்க செய்து, கோரிக்கைகளின் மீது  உரிய நடவடிக்கை எடுக்க அறி வுறுத்தினார்.      விவசாயிகள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வெங்காயத்தில் ஏற்படும் திரு கல் நோய் பாதிப்பை தடுக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என்றும், மக்காச் சோளத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.