districts

img

பேராவூரணி ரயில் நிலையத்தை சுற்றி முட்புதர்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

பேராவூரணி ரயில் நிலையத்தை சுற்றி முட்புதர்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை தஞ்சாவூர், டிச.27 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில் நிலையம் நகரின்  மையப் பகுதிக்குள் அமைந்துள்ளது. சுமார் 500 மீட்டர் நீள முள்ள ரயில்வே நிலையத்தைச் சுற்றிலும் இருபுறமும் உள்ள  முட்புதர்கள் தற்போது பெய்த மழையினால் முளைத்து பெரும் காடுகளாக காட்சியளிக்கிறது.  இந்த ரயில் நிலையத்தை சுற்றி 500-க்கும் மேற்பட்ட வர்த்தக வியாபார நிறுவனங்கள், கடைகள், மற்றும் குடி யிருப்புகள் உள்ளன. இந்த முட்புதர் காடுகளால் கொசு  உற்பத்தி அதிகமாகி, வியாபார நிறுவனங்கள் மற்றும்  குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களை அச்சுறுத்து கிறது. மேலும், பாம்புகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதி களில் புகுந்து விடுகின்றன. அடர்ந்த முட்புதர்காடுகளாக இருப்பதால் இரவு நேரங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும்  நபர்கள் மறைந்து இருப்பதற்கு ஏதுவாக இந்த இடம் உள்ளது.  எனவே, சம்பந்தப்பட்ட ரயில்வே துறையினர் இந்த இடத்தை ஆய்வு செய்து தேவையற்ற முட்புதர்காடுகளை அகற்றி சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.