குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
தஞ்சாவூர், டிச.27 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூர், வடு கன்குத்தகை என்ற முக வரியில் வசிக்கும் சுரேஷ் (39) என்ற பாலியல் குற்றவாளியை, தஞ்சா வூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரை யின் பேரில், திருச்சி ராப்பள்ளி மத்திய சிறை யில் தடுப்புக் காவலில் வைத்திட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நடுவர் பா.பிரியங்கா பங்கஜம், உத்தரவிட்டார். இதை யடுத்து சுரேஷை காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறை யில் அடைத்தனர்.
திருக்குறள் வினாடி-வினா போட்டி
அரியலூர், டிச.27 - அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூல கத்தில், திருக்குறள் வினாடி வினா போட்டி வியாழக்கிழமை நடை பெற்றது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் உருச் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறை வுற்றதையொட்டி, அரிய லூர் மாவட்ட மைய நூல கத்தில் வெள்ளி விழா நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக் கிழமை நடைபெற்ற வினாடி வினா போட்டிக்கு மாவட்ட மைய நூலக அலுவலர் இரா.வேல்முருகன் தலைமை வகித்தார். போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 57 பேர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முன்னதாக நூலகர் முருகானந்தம் வரவேற் றார். நூலகர் ந.செசிராபூ நன்றி கூறினார். போட்டி நடுவர்களாக அரியலூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் குண சுந்தரி, மரகதம் ஆகி யோர் செயல்பட்டனர். இந்நிகழ்ச்சியில், வாச கர்கள், வாசக வட்ட உறுப்பினர்கள், நூலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டி யில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவி களுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
முதியவருக்கு 5 ஆண்டு சிறை
திருநெல்வேலி, டிச .27- அம்பாசமுத்திரம் அருகே சிறுமியிடம் அத்து மீறலில் ஈடுபட முயன்ற வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், ஆழ்வார் துலக்கப்பட்டி, அண்ணாநகரை சேர்ந் தவர் சவுந்தர்ராஜ் (67). இவர் கடந்த 2018ம் ஆண்டு சிறுமியிடம் அத்துமீற முயன்றார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத் திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்து சவுந்தர் ராஜை கைது செய்தனர்.நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு விசா ரணை நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா தேவி குற்றம் சாட்டப்பட்ட சவுந்தர்ராஜிற்கு 5 ஆண் டுகள் சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்ப ளித்தார்.
லயன்ஸ் சங்கம் சார்பில் ஹெல்மெட் வழங்கல்
பாபநாசம், டிச.28 - கபிஸ்தலம் லயன்ஸ் சங்கம், அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் இணைந்து பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலத்தில் நடத்திய விழாவை மாவட்ட ஆளுநர் சவரிரரஜ் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட முதல் பெண்மணி மேரி நிர்மலா வாழ்த்தினார். இதில் மண்டலத் தலைவர் குணா, மாவட்ட இணைச் செயலர் துரைசாமி, மாவட்ட இணைப் பொருளாளர் தமிழ்ச்செல்வன், கபிஸ்தலம் லயன்ஸ் சங்கத் தலைவர் குணசேகரன், செயலர் ஸ்ரீராம், பொருளாளர் ஜெயசீலன், அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கத் தலைவர் விஜயராஜன், செயலர் சுரேஷ், பொருளாளர் முகமது இஸ்மாயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கபிஸ்தலம் லயன்ஸ் சங்கம் சார்பில் சேவைத் திட்டமாக 50 பேருக்கு ஹெல்மெட், கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஹெட் லைட் ஸ்டிக்கர் ஒட்டுதல், சாலையோர பூ வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கு தல் உள்ளிட்ட சேவை திட்டங்கள் வழங்கப்பட்டன.
குற்றம் செய்பவர்கள்தான் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்வார்கள்! அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை, டிச.27 - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்கிறார் என்றால், அவர் செய்த ஏதோ வொரு குற்றத்துக்காக தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொள்கிறார் என்று தான் அர்த்தம் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “பழனிக்கு பாத யாத்திரை போவோர் 40 நாட்கள் விரத மிருந்து போவார்கள். அப்போது காலணி அணியமாட்டார்கள். திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என அவர் சொல்வதுதான் உண்மை என்றால், அவர் வாழ்நாள் முழு வதும் காலணி அணியப் போவதில்லை. சாட்டையில் அடிப்பது என்பது தண்டனை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டை யால் அடித்துக் கொள்கிறார் என்றால், அவர் செய்த ஏதோவொரு குற்றத்துக்காக தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொள்கிறார் என்று தான் அர்த்தம். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் நீதிமன்றத்துக்குப் போய்விட்டது. யாரும் எதையும் மறைக்க முடியாது. திமுக வுக்கு அந்தக் குற்றவாளியைக் காப்பாற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. குற்றம் நடந்த பிறகு உடனடியாக வழக்குப் பதிவு செய்கிறோம். உடனுக்குடன் குற்றவாளி கைது செய்யப்படுகிறார். கடந்த ஆட்சியின் போது பொள்ளாச்சி விவ காரத்தில் அரசே அதனை மறைக்கப் பார்த்தது. போராட்டங்களுக்குப் பிறகுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எங்கள் நட வடிக்கையில் பாரபட்சம் இல்லை” என்றார்.
ஐந்து கோவில்களின் தங்கம் எஸ்பிஐ-யிடம் ஒப்படைப்பு
திருச்சிராப்பள்ளி, டிச.27 - சமயபுரம் மாரியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் ஆகிய 5 கோயில் களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 541 கிலோ 781 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்கள் மும்பையி லுள்ள ஒன்றிய அரசின் தங்க உருக் காலையில் உருக்கப்பட்டு, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்தி டும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி யின் துணை பொது மேலாளர் அதுல் பிரியதர்ஷினி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வெள்ளி யன்று, திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஓய்வு பெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் துரைசாமி ராஜு, ரவிச்சந்திர பாபு மற்றும் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இருப்பில் இருந்த 30 கிலோ 596 கிராம் சுத்த தங்கக் கட்டிகளை வங்கியில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்தனர்.